மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'காட் பாதர்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 5

05 Jul, 2022 | 01:01 PM
image

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது.

அத்துடன் தசரா திருவிழா கொண்டாட்டத்தின் போது இப்படம் பட மாளிகைகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘தனி ஒருவன்’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனி தடம் பதித்த இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘காட் ஃபாதர்.’ மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்துவரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

இவர்களுடன் பொலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், இயக்குநர் பூரி ஜெகந்நாத், நடிகர் சத்யதேவ்  உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிரம்மாண்டாக தயாராகி வரும் இந்த படத்தை கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனங்கள் சார்பில்  தயாரிப்பாளர்கள் ஆர். பி சௌத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். 

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான புகைப்படம் மற்றும் வீடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி முதன் முறையாக ஸ்போர்ட்ஸ் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கருப்பு நிற ஆடை அணிந்து நாற்காலியில் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக அமர்ந்தபடி தோற்றமளிப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

இந்த 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான காணொளியுடன் இந்தத் திரைப்படம் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்களும், திரையுலக வணிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37