மத்திய மாகாணத்திலுள்ள மதுபானசாலைகளை மாலை நேரத்தில் திறப்பதற்கான சட்டமொன்றை கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய மாகாண ஆளுநர் நிலூக ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரை மதுபானசாலைகளை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கலேவல மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்தக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.