வெள்ளைவேனுக்கு பதிலாக கறுப்பு வேன் கலாசாரம் ஆரம்பம்

24 Dec, 2015 | 10:14 AM
image

வெள்­ளைவேன் கடத்தல் கலா­சாரம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு கறுப்பு வேன் கடத்தல் கலா­சாரம் உரு­வா­கி­யுள்­ளது. கூட்டு கட்­சி­களின் ஜன­நா­யக ஆட்­சியில் இதுவும் ஒரு அடை­யா­ளமா என மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் கேள்வி எழுப்­பினர்.

ஜன­நா­யகம் என்ற பெயரில் அடக்­கு­முறை அர­சாங்­கமே இன்றும் முன்­னெ­டுக்­கப்­ப­­டு­வ­தாக ஜே.வி.பி. குற்றம் சுமத்­தி­யது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் நடை­பெற்­ற­போதே கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த காலத்தில் ஆட்­க­டத்தல், காணா­மல்­போகும் கலா­சாரம் அதி­க­மா­கவே காணப்­பட்­டது. அப்­போது எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­வர்கள் அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்து ஜன­நா­யகம் பேசி­ய­தையும் நாம் அவ­தா­னித்தோம். அதேபோல் கடத்தல் சம்­ப­வங்கள், கா­ணா­மல்­போ­தலை தடுக்க வேண்டும் என்ற அடிப்­ப­டையில் தான் ஆட்­சி­மாற்றம் ஒன்றை மக்கள் மூலம் ஏற்­ப­டுத்­தவும் அனை­வரும் முன்­வந்தோம். அவ்­வா­றான நிலையில் ஆட்­சி­மாற்றம் ஒன்றும் நிக­ழழ்ந்­தது. இந்த மாற்­றத்தில் ஜன­நா­யகம் பலப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் வெள்­ளைவேன் கலா­சாரம் உள்­ளிட்ட அடக்­கு­முறை செயற்­பா­டுகள் முற்­றாக அழிக்­கப்­பட வேண்டும் என்­ப­னவும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

ஆனால் இன்று வெள்­ளைவேன் கலா­சாரம் அழிக்­கப்­பட்­டாலும் கறுப்பு வாக­னத்தில் கடத்தும் கலா­சாரம் தலை­தூக்­கி­யுள்­ளது. அமைச்­சர்­களின் தேவைக்கும் அவர்­களின் பழி­தீர்க்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் அமைய ஆட்­களை கடத்தும் கலா­சாரம் மீண்டும் இந்த ஆட்­சியில் பல­ம­டைந்து காணப்­ப­டு­கின்­றது. கடந்த ஆட்­சியில் நடந்த மோச­மான சம்­ப­வங்­க­ளையும் ஆட்­க­டத்தல் கலா­சா­ரத்­தையும் மாற்­ற­வேண்டும் என்று வலி­யு­றுத்தப்பட்­டதே தவிர வெள்­ளை­வே­னுக்கு பதி­லாக கறுப்பு டிபென்டர் வாக­னங்­களை மாற்­ற­வேண்டும் என கூற­வில்லை.

அதேபோல் ஆட்­க­டத்தல் அர­சி­யல்­வா­திகள் என கூறப்­படும் நபர்­களின் பின்­னணி என்ன? அவர்கள் எவ்­வா­றான சூழலில் வளர்ந்­த­வர்கள் என்­பது புதி­தாகக் கூற­வேண்­டிய அவ­சியம் இல்லை. கடந்த காலத்தில் இவர்­களின் அர­சியல் நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு அமைந்­தது என்­பதும் மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். ஆகவே, அர­சி­யல்­வா­தி­களை பற்றி கதைத்து மக்­களை ஏமாற்­றாது இந்த கலா­சா­ரத்தை முற்­றாக ஒழிக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

அதேபோல் பொரு­ளா­தார ரீதியில் இந்த அர­சாங்கம் மிகவும் மோச­மான கொள்­கை­க­ளையே முன்­வைத்­துள்­ளது. எந்த அர­சாங்­கமும் மேற்­கொள்­ளாத வகையில் இந்த கூட்டு அர­சாங்கம் தமது பொரு­ளாதாரக் கொள்­கை­களை வர­வு­ – செ­லவு திட்­டத்தில் முன்­வைத்­துள்­ளது. முன்­னைய அர­சாங்­கத்தின் ஊழல்­க­ளையும் கொள்­ளை­யையும் கண்­ட­றி­வ­தாக தெரி­வித்து உரு­வாக்­கிய இந்த அர­சாங்கம் இந்த ஆட்­சி­யிலும் ஊழல் நட­வ­டிக்­கை­யையே முன்­னெ­டுக்­கின்­றது. ஊழலில் ஏற்­பட்ட நஷ்டத்தை சமாளிக்க மக்களின் மீது பொருளாதார சுமைகளை சுமத்தி பணத்தை அறவிட முயற்சிக்கின்றது.

இவைகளும் நல்லாட்சியில் ஒரு அடையாளமா என்ற கேள்வியே இப்போது அனைவர் மத்தியிலும் எழுகின்றது. நல்லாட்சி என்ற பெயரில் அமைக்கப்பட்ட அரசாங்கமும் இன்று அராஜக அரசாங் கமாகவே மாறியுள்ளது என அவர் குறிப் பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58