எரிபொருள் நிலையத்தில் சிவிலியனை தாக்கிய இராணுவ லெப்டினன் கேர்னல் ; விசாரணை ஆரம்பம் - வீடியோ எடுத்த நபருக்கு மரண அச்சுறுத்தல்

Published By: Digital Desk 4

04 Jul, 2022 | 06:06 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல், யக்கஹபிட்டிய ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து,  சிவிலியன் ஒருவர் இராணுவ வீரர்களால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவ  லெப்டினன் கேர்ணல் தர கட்டளை அதிகாரி ஒருவர் அவரை காலால் உதைத்து தாக்கும்  காணொளி சமூக வலைத் தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பில் நிறுவன மட்டத்திலான உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

குருணாகல், யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர்கலில் ஒருவரே இராணுவ அதிகாரியால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இராணுவத்தின் தகவல்கள் பிரகாரம்,  குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே எரிபொருளினை பெற்றுக்கொள்ள ஒன்றுகூடியவர்களிடையே அமைதியின்மை நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த  தலையீடுச் செய்த இராணுவத்தினரை அங்கிருந்தவர்கள் மோசமான வார்த்தைகளைக் கொண்டு திட்டியதாக இராணுவத்தினர் கூறுகின்றனர்.

இதன்போது இருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒருவரே, இராணுவத்தின் கைதில் இருக்கும் போது இராணுவத்தினர் அவரை பிடித்திருக்க, திடீரென வரும்  இராணுவ கட்டளை தர அதிகாரி ஒருவர்  காலால் உதைத்து தாக்குவது காணொளிகளில் பதிவாகியுள்ளது.

குறித்த இராணுவ அதிகாரியின் நடவடிக்கைக்கு அங்கிருந்த பொது மக்கள் உடனடியாகவே எதிர்ப்பு வெளியிடுவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

கேசரி முன்னெடுத்த தேடலின் போது, குறித்த தாக்குதலை முன்னெடுக்கும் இராணுவ அதிகாரி,  குருணாகல் - வெஹர பகுதியில் உள்ள இராணுவ படையணியின் கட்டளை அதிகாரியான  லெப்டினன் கேர்ணல் விராஜ் குமாரசிங்க என தெரியவந்தது.

எவ்வாறாயினும், குறித்த இராணுவ அதிகாரி தாக்கும் காட்சியை வீடியோ படம் எடுத்ததாக கூறப்படும் நபருக்கும், அந்த அதிகாரி மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கேசரிக்கு தகவல்கள் பதிவாகியுள்ளன.

தனது கையடக்கத் தொலைபேசியில் குறித்த தாக்குதல் காட்சியை படமெடுத்து சமூக வலைத் தளத்தில் பதிவேற்றிய குருணாகல் பகுதியைச் சேர்ந்த ரசிக ஹேரத் என்பவரை இரு முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த அதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனால்  ரசிக ஹேரத், தனது மனைவி பிள்ளைகளுடன் வழமையான இருப்பிடத்தை மாற்றி வேறு இருப்பிடமொன்றில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46