15 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஹொங்கொங் சென்றடைந்தார்.

பிரதமரை இலங்கைக்கான சீனத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு மற்றும் இலங்கைத்தூதரகத்தின் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஹொங்கொங் பயணிப்பதும் இதுவே முதற்தடவையாகும்.

இந்த விஜயத்திற்கு அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் ஆசிய பசுபிக் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். 

அத்துடன் ஆசிய பசுபிக் மாநாட்டிற்கு வருகை தரும் ஏனைய உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.