இலங்கை நெருக்கடி சீனாவிற்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பை இந்தியாவிற்கு வழங்குகின்றது

Published By: Rajeeban

04 Jul, 2022 | 12:27 PM
image

NEW DELHI — (AP) 

DAVID RISING and SHEIKH SAALIQ

இலங்கையின் அமைவிடத்தின் மூலோபாய ரீதியிலான முக்கியத்துவம் காரணமாக அந்த பிராந்தியத்தின் பெரும் தேசங்களான சீனா இந்தியா போன்றவற்றின் அளவுக்கதிகமான கவனத்தை இலங்கை ஈர்த்துள்ளது.

செல்வாக்கை பெறுவதற்கான போட்டிகளில்  சீனாவும் அதன் நிபந்தனையற்ற, இலகுவில் கிடைக்ககூடிய கடன்களும் உட்கட்டமைப்பு முதலீடுகளும் முன்னிலை பெற்றுள்ளன.

ஆனால் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி இந்தியாவிற்கு இந்த நிலையை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. புதுடில்லி அதன் அயல்நாட்டிற்கான பாரியளவுநிதி மற்றும் பொருளதவியுடன் காலடி எடுத்துவைத்துள்ளது.

சர்வதேச அரசியலில் நன்கொடை என எதுவுமில்லை என தெரிவிக்கின்றார் இந்தியாவின் ஓ.பீ. ஜின்ட்வால் பல்கலைகழகத்தின் சர்வதேச விவகாரங்களிற்கான பிரிவின் தலைவர் ஸ்ரீராம் சவுலியா.

சீனாவை இந்தியாவின் கொல்லைபுறத்திலிருந்து விரட்டி இந்தியாவிற்கு சார்பாக சமநிலையை மீட்டெடுப்பதேஇதன்  நோக்கம் என்கின்றார் அவர்.

22 மில்லியன் சனத்தொகையை கொண்ட தீவான இலங்கை மத்திய கிழக்கிலிருந்து சீனா இறக்குமதி செய்யப்பட்ட  பெருமளவு எண்ணெயை பெறும் இந்து சமுத்திரத்தின் கடற்பாதையில் இந்தியாவின் தென்பகுதி கரையில் அமைந்துள்ளது.

ஆசியா ஆபிரிக்காவில் அதிகளவு உட்கட்டமைப்பு திட்டங்களி;ற்கு நிதியை வழங்கும் சீன ஜனாதிபதியின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெருமளவு கடன்களை பெற்றார்,நிபுணர்கள் நிராகரித்தபோதிலும் தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் 1.1பில்லியன் டொலர் பெறுமதியான துறைமுகத்தை உருவாக்கினார்.

சீனாவிற்கு திருப்பிசெலுத்தவேண்டிய கடன்களிற்கு ஏற்றவிதத்தில் இந்த துறைமுகத்தினால் வருமானத்தை ஈட்டமுடியாதநிலையேற்பட்டதை தொடர்ந்து 2017 இல் இந்த துறைமுகத்தையும் ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் 99 வருட குத்தகையில் சீனாவிற்கு வழங்கவேண்டிய ந நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.

பிராந்திய போட்டியாளரான இந்தியாவி;;ன் கடற்கரைக்கு நேரே சீனா காலடி எடுத்துவைப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் சீனாவிற்கு கிடைத்தது.

இது தென்னாசியாவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு குறித்த கரிசனையை அதிகரித்தது குறிப்பாக இலங்கை நேபாளம் போன்ற நாடுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது குறித்த கரிசனை.

லடாக் எல்லையில் சீன இந்திய படையினருக்கு இடையில் 2020 இல் மோதல்கள் இடம்பெற்றதை தொடர்ந்து பிராந்திய அளவில் சீனா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்வது குறித்த இந்தியாவின் கரிசனைகள் அதிகரித்தன.

சீனாவி;ன் கடல்சார் அணுகுமுறை என்பது தென்சீன கடல் மற்றும் பசுபிக் குறித்து அதிக கவனம் செலுத்துவதாக காணப்படுகின்றது,அதேவேளை இலங்கை மற்றும் இந்துசமுத்திரம் குறித்து அது பொருளாதார நோக்கங்களுடன் செயற்படுகின்றது என தெரிவிக்கின்றார் லண்டனை தளமாக கொண்ட மூலோபாய கற்கை நெறிகளிற்கான சர்வதேச நிறுவகத்தின் ஆய்வாளர் ராகுல்ரோய் சௌத்திரி.

பாதுகாப்பு விவகாரங்களை பொறுத்தவரை சீனாவிற்கு இலங்கை முக்கியமில்லை,ஆனால் தென்னாசியாவில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கும் இந்தியாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கும் சீனாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

இடைநடுவில் இலங்கை சிக்குண்டுள்ளது, பிராந்தியத்தின் ஏனைய நாடுகளை போல இலங்கைக்கு சீனாவும் இந்தியாவும் தேவை இந்த இரண்டுநாடுகளினதும் சனத்தொகை 3 பில்லியன்  என்கின்றார் ரோய் சௌத்திரி.

இது தெளிவற்ற அல்லது விளங்கிக்கொள்ள முடியாத விடயமல்ல இலங்கை தலைவர்கள் ஒரே சமயத்தில் இந்திய சார்பானவர்களாகவும் சீனா சார்பானவர்களாகவும் இருக்கவேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

தற்போதைய நெருக்கடியான நிலையில் இந்தியாவி;;ன் உதவிகளிற்காக இலங்கை மிகவும் நன்றியுடையதாக உள்ளது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச இந்த நிலைமை காரணமாக இறைமையும் அரசியல் சுதந்திரமும் பாதி;க்கப்படுவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும் என தெரிவித்தார்.

எங்கள் சொந்த தேசிய நலன்களை அதிகரிப்பதற்காக இலங்கை என்னசெய்யவேண்டும் என்றால் எங்களின் சொந்த நலன்களை உறுதி செய்யவேண்டும் என அசோசியேட்டட் பிரசிற்கு தெரிவித்த சஜித்பிரேமதாச  எந்த அதிகார குழு அல்லது குழுவை சேர்ந்தவர்கள் என்பதை பொருட்படுத்தாமல் நாங்கள் அனைவருடனும் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்தார்.

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவடைந்ததை தொடர்ந்து ஏப்பிரல் மாதம் முதல் இலங்கை ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளது, அந்நிய செலாவணி பற்றாக்குறை பரந்துபட்ட எரிபொருள் உணவு தட்டுப்பாடுகளிற்கும் மின்சார துண்டிப்பிற்கும் காரணமாக அமைந்துள்ளது.இவ்வாறான நிலையி;ல 2019 இல் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட  மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மே மாதம் பதவி விலகினார் ஆனால் கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் அதிகாரத்தை பிடித்தவண்ணமுள்ளார்.

2019 இல் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மேற்கொண்ட தொடர் தாக்குதலால் ,சுற்றுலாப்பயணிகள் வருகைகுறைவடைந்ததால்,  சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததால்( முக்கிய வருமானம் ஈட்டித்தரும் தொழில்துறை ) சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட நிதியின் மூலம் முன்னெடுக்கப்பட்ட பல உட்கட்டமைப்பு திட்டங்களால் பாரிய கடன்களை எதிர்கொண்டிருந்த(சகோதரர் மகிந்தவே முன்னெடுத்தார்) பொருளாதாரத்தையே கோத்தபாய ராஜபக்ச சுவீகரித்தார்.

எனினும் தொடர்ச்சியான பல புத்திசாலித்தனமற்ற திட்டங்கள் நிலைமையை மோசமாக்கின,சர்வதேச கொரோனா பெருந்தொற்று சுற்றுலாத்துறையை பாதித்தாலும்,உக்ரைன் யுத்தம் உணவு மற்றும் எரிபொருள் விலைகளை அதிகரித்ததும்  இந்த நிலைமை மேலும் நெருக்கடி மிகுந்ததாக மாற்றியது.

இலங்கை அரசாங்கத்தின்  தற்போதைய கடன் 51 பில்லியன் டொலர்கள் எனினும் அதனால்வட்டியை கூட செலுத்தமுடியாத நிலை காணப்படுகின்றது 2026 இல் செலுத்தவேண்டிய 25பில்லியன் டொலர் கடனில் 7 பில்லியன் டொலரை இந்த வருடம் செலுத்தவேண்டும் எனினும் அரசாங்கம் அதனை திருப்பி செலுத்துவதை இடைநிறுத்தியுள்ளது.

ஜப்பான் ஆசிய அபிவிருத்திவங்கிக்கு பின்னர் இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கும் நாடான சீனாவிற்கு இலங்கை தனது கடன்களில் பத்துவீதத்தை செலுத்தவேண்டும்.

இலங்கைக்கு சாதகமான விதத்தில் கடன்களை வழங்க முன்வந்த சீனா இலங்கையின் சில கடன்கள் விடயத்தில் இரக்கம் காட்ட மறுத்துள்ளது.சீனாவிடம் கடன்பெற்ற ஆசிய ஆபிரிக்க நாடுகளும் கடன் நிவாரணத்தை கோரலாம் என சீனா கருதியதே இதற்கு காரணமாகயிருக்கலாம்.

மகிந்த ராஜபக்சவிற்கு பின்னர் பிரதமராக பதவியேற்ற ரணில்விக்கிரமசிங்க சீனா வழங்கிய 1.5 கடன்களை இலங்கையால் பெற முடியவில்லை என தெரிவிக்கின்றார்,மூன்று மாத அந்நியசெலாவணி கையிருப்பு உள்ள நாட்டிற்கே பணத்தை வழங்க முடியும் என்ற சீனாவின் நிபந்தனையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியா பல மில்லியன் டொலர் பெறுமதியான அரிசி பால்மா மருந்துகள் ஏனைய மனிதாபிமான பொருட்கள் எரிபொருட்கள் போன்றவற்றுடன் உதவ முன்வந்துள்ளது.

இந்தியா சாதகமான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் கடனுதவியை அளித்துள்ளது,இலங்கையின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்;சியடைந்துவிட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள போதிலும் இலங்கையின் நிலைமை மோசமாவதை தடுப்பதற்கு உதவிய நாடாக இந்தியா பாராட்டப்படுகின்றது.

முன்னர் பல தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ள பிரதமர் ரணி;ல்விக்கிரமசிங்க  ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் காணப்படுவதால்  குறைந்தளவே  செல்வாக்கு  செலுத்தக்கூடிய நிலையில் உள்ளபோதிலும் இந்திய சார்பானவர் என கருதப்படுகின்றார்.

ராஜபக்ச குடும்பம் சீனா சார்பானது என கருதப்படும் அதேவேளை நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு சீனாவும் காரணம் என்ற அபிப்பிராயம் காணப்படுகின்றது.

அரசியல் காற்று இந்தியாவிற்கு சாதகமாக வீசத்தொடங்குகின்றது என்கின்றார் சௌலியா.

சீனாவின் கடன்களே இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் என்ற கருத்தினை பரப்புவதில் இந்தியா ஆர்வம் காண்பிக்காத போதிலும் அவ்வாறான கருத்தை இந்தியா நிராகரிக்கவில்லை.

சீனாவின் கடன்பொறி என்பதை பிராந்திய அளவில் தனக்கு சாதகமான கருத்தாக இந்தியா கருதுகின்றது .

சீனாவின் கடன்பொறி என்ற கருத்து வலுப்பெற்றால் இந்தியா கவலைப்படாது என்கின்றார் ரோய் சௌத்திரி.

இந்தியாவின் ஏற்றுமதிகள் சிலவற்றிற்கான   முக்கிய நாடாக காணப்படும் இலங்கையில் சீனா முன்னெடுக்கவிருந்த சில திட்டங்களை இந்தியா சமீபத்தில் கைப்பற்றியுள்ளது.

இலங்கையில் சூரியசக்தி திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் மார்ச்மாதத்தில் இந்தியா உடன்பாட்டிற்கு வந்தது.அதேமாதம் சீனாவுடனான புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றை  இரத்துச்செய்த கொழும்பு சீனாவின் போட்டி நாடான இந்தியாவிற்கு வழங்கியிருந்தது.

இந்தியா இலங்கையில் மூலோபாயரீதியி;ல் முக்கியத்துவம் வாய்ந்த கால்தடத்தை தொடர்ந்தும் பேண முயலும் அதேவேளை சீனாவின் செல்வாக்கை குறைப்பது கட்டுப்படுத்துவதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது என்கின்றார் இந்தியாவி;ன் முன்னாள் வெளிவிவகார செயலாளரும் மூலோபாய விவகாரங்களிற்கான நிபுணருமான கே.சி சிங்

இலங்கையின் உதவிக்கு விரைவது பிரதமர் மோடியின் அயல்நாட்டிற்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு பொருத்தமான விடயமாக உள்ளது,( அயல்நாடுகளுடன் உறவுகளை வளர்த்தெடுப்பது பேணுவதே இந்த கொள்கை) என தெரிவிக்கும் ரோய் சௌத்திரி, இலங்கை போன்ற அயல்நாடு முழுமையான குழப்பநிலைக்குள் சிக்காமல் இருப்பது இந்தியாவின் நலனிற்கு முக்கியமான விடயம் என்கின்றார்.

இதேவேளை இந்தியா இலங்கையை கடனின் பிடியிலிருந்து விடுவிக்கும் முயற்சியில் தான் மாத்திரம் சிக்குப்படும் நிலையை விரும்பவில்லை,இதன் காரணமாகவே சர்வதேச நாணயநிதியத்தையும் ஏனைய நாடுகளையும் ஊக்குவிக்கின்றது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

பாதுகாப்பு விடயங்களை பொறுத்தவரை அது பாதுகாப்பு சகாவாக விளங்கவிரும்பும் என ரோய் சௌத்திரி தெரிவிக்கின்றார்.

பொருளாதார விடயங்களை பொறுத்தவரை  இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் நாடுகளில் ஒன்றாக விளங்க இந்தியா விரும்பும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04