ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

Published By: Vishnu

04 Jul, 2022 | 02:29 PM
image

மோட்டார் சைக்கிளில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய  அம்பாறை மாவட்டத்தில் உள்ள   கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இக் கைது இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதிக்கு குறித்த போதைப்பொருளை கடத்தி செல்வதற்கு தயாராக இருந்த வேளை அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரைப்பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் வைத்து சந்தேக நபர் கைதானார்.

 

இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து இரு கைத்தொலைபேசிகள் பொதி செய்யப்பட்ட  20 கிராம்  ஐஸ் போதைப்பொருள்  பயணம் செய்த மோட்டார் சைக்கிள் என்பன  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்  டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிசங்க  உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட்களான பண்டார (13443), வீரகோன் (33354) பொலிஸ் கன்ஸ்டபிள்களான நிமேஸ் (90699), ராஜபக்ஸ(24812) வாகனச்சாரதி டபிள்யு.எம் குணபால (19401) அதிகாரிகள் மற்றும்  புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக  வாழைச்சேனை காகித புலனாய்வு  அதிகாரிகள் அழைப்பை ஏற்படுத்திய பின்னர் 

குறிப்பிட்ட இடமொன்றிற்கு வரவழைத்ததுடன்  அவ்விடத்தில் மாறுவேடத்தில்  சென்ற கல்முனை  விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர்  கைது செய்யப்பட்டார்.

பின்னர்  கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை  பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38