இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயார் ஆனால் இந்த அரசாங்கம் இருக்கும் வரை சாத்தியமாகாது - முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

Published By: Vishnu

04 Jul, 2022 | 02:28 PM
image

எத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது.

ஆனால் எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவிசெய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை. ஒருவருடைய பதவியை விட நாட்டில் வாழும் ஏறத்தாழ இரண்டு கோடி மக்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் இங்கு கவனிக்கப்பட வேண்டியது என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடனுக்கு மேல் கடன். கடனுக்கு வட்டி வேறு. இந்திய அரசு பெற்றோலை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்து 40 வீத இலாபத்தை வைத்து நமது நாட்டுக்கு தருகிறார்கள்.

உதாரணமாக 500 மில்லியன் டொலரை  தந்துவிட்டு 1000- 2000 மில்லியன் டொலர் பெறுமதியான இலங்கையின் சொத்தை எழுதி வாங்கிக்கொள்கிறார்கள்.

இந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்கும் ஒவ்வொரு நாளும் எமது நாடு பயங்கரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இப்போது நாங்கள் அனுபவித்துக்கொண்டிருப்பதல்ல கஷ்டம். இனித்தான் நாம் அதிக கஷ்டங்களை அனுபவிக்க போகின்றோம்.

இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு இந்த அரசாங்கம் தொடர்ந்தால் விளைவு மிகமோசமாக இருக்கும்.

இந்த அரசாங்கம் நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்து, இந்த நாட்டை கட்டியெழுப்பும் திறமையானவர்களிடம் நாட்டை கையளித்துவிட்டு ஒதுங்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டின் ஆட்சியாளர்கள் அதிகாரத்திலிருந்து ஒதுங்கும் வரை இலங்கைக்கு உதவ முன்வராது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39