மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம்

Published By: Vishnu

04 Jul, 2022 | 11:14 AM
image

மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் மற்றும் சாரதிகள் இணைந்து இன்று 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த கழிவு அகற்றும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக தடைப்பட்டுள்ளது.

உரிய முறையில் எரிபொருள் வழங்கப்படாமையால் குறித்த கழிவு அகற்றும் நடவடிக்கைfளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு பணிக்கு வாகனங்களுக்கு தேவையான எரிபொருட்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணிக்குத் தேவையான எரிபொருளை வழங்குமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் மற்றும் சாரதிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளுராட்சி மன்றங்களின் சுகாதார சேவைகளை தரம் தாழ்த்தி பார்ப்பது ஏன் ?,பெற்றோல் பங்கீட்டில் உள்ளூராட்சி சேவைகள் புறக்கணிக்கப்படுவது ஏன் ?, திண்மக் கழிவகற்றல் சேவை அத்தியாவசிய சேவை என்று தெரியாதா அரச அதிபரே ? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அகன்று சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58