கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூவர் கைது

Published By: Digital Desk 3

04 Jul, 2022 | 02:35 PM
image

(எம்.வை.எம்.சியாம்)
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் 19 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் வெளியேற முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று முன்தினம்  இரவு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
19 கோடி பெறுமதியான எட்டரை கிலோ கிராம் நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள்  அமெரிக்க டாலர்கள்  75,000  மற்றும் யூரோ 18,000 என்பவற்றை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மொத்தமாக கொண்டு வரப்பட்ட நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு விமான நிலையத்தில் உள்ள புறப்பாடு முனையத்தில் தங்கியிருந்த வர்த்தகர்கள் மற்றும் கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் வெளியேற முயற்சித்துள்ளனர்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்தும்  புதுடெல்லி இருந்து வந்த இந்தியன் விமானம் மூலம் இந்த நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 53 மற்றும் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் எனவும் இருவரும் இரு நாட்டு விமான நிலையங்கள் ஊடாக தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கடத்தி வருவதாகவும் 46 வயதுடைய மற்றைய நபர் தொடர்ச்சியாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அடிக்கடி வருபவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27