சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஜாவா லேன், கிறிஸ்டல் பெலஸ், மாத்தறை சிட்டி ஆகியவற்றுக்கு இலகு வெற்றி

Published By: Digital Desk 5

04 Jul, 2022 | 10:38 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் 5ஆம் கட்டத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற போட்டிகளில் ஜாவா லேன், கிறிஸ்டல் பெலஸ், மாத்தறை சிட்டி ஆகியன இலகுவான வெற்றிகளை ஈட்டின.

காலி விளையாட்டரங்கில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் முதல் 25 நிமிடங்களில் போடப்பட்ட கோள்களின் உதவியுடன் ஜாவா லேன் 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.

போட்டியின் 6ஆவது நிமிடத்தில் டொக்கோக்வூ பிரான்சிஸ் முதல் கோலை போட்டு ஜாவா லேனை முன்னிலையில் இட்டார்.

எட்டு நிமிடங்கள் கழித்து ஜாவா லேனின் 2ஆவது கோலை மாலக்க பெரேரா புகுத்தினார்.

போட்டியின் 25ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை ஒலுவாசியுன் ஒலாவேல் முறையாகப் பயன்படுத்த ஜாவா லேன் 3 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து ஜாவா லேன் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்த போதிலும் கிடைக்கப்பெற்ற 3 இலகுவான கோல் போடும் வாய்ப்புகளை தவறவிட்டது.

இடைவேளையின் பின்னரும் ஜாவா லேன் வீரர்கள் மேலும் 3 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.

மறுபுறத்தில் சுப்பர் சன் அணியின் 2 கோல் போடும் முயற்சிகளை  ஜாவா லேன் கோல்காப்பாளர் அஷ்பக் அயூப் மிகவும் சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தினார்.

இந்த வெற்றியுடன் ஜாவா லேன் கழகம் 13 புள்ளிகளுடன் தொடர்ந்தும் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.

பொலிஸ் கழகத்தை வீழ்த்தியது கிறிஸ்டல் பெலஸ்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற பொலிஸ் கழகத்துடனான போட்டியில் ஆரம்பம் முதல் கடைசிவரை திறமையாக விளையாடிய நாவலப்பிட்டி கிறிஸ்டல் பெலஸ் 4 - 0 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

போட்டியின் இரண்டு பகுதிகளிலும் தலா 2 கோல்களை கிறிஸ்டல் பெலஸ் போட்டது.

போட்டியின் 29ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து பறிமாறப்பட்ட பந்தைப் பெற்றுக்கொண்ட மொஹமத் அப்நாத், முன்னோக்கி வந்த பொலிஸ் கோல்காப்பாளரை கடந்து செல்லும் வகையில் பந்தை கோலினுள் புகுத்தி கிறஸ்டல் பெலஸை முன்னிலையில் இட்டார்.

5 நிமிடங்கள் கழித்து வலப்புறத்திலிருந்த மொஹமத் பஹ்மி பரிமாறிய பந்தை ஹாவ் வொலி மூலம் மீண்டும் அப்நாத் கோலாக்கினார்.

அதனைத் தொடர்ந்து கிறிஸ்டல் பெலஸுக்கு ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் அதன் வீரர்களால் அவற்றை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

இதனிடையே பொலிஸ் கழகத்துக்கு கிடைத்த இலகுவான 3 வாய்ப்புகள் கொட்டை விடப்பட்டன. அதுவே அதன் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

இடைவேளைக்குப் பின்னர் 52ஆவது நிமிடத்திலும் 76ஆவது நிமிடத்திலும் பிரேம் குமார் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக 2 கோல்களைப் போட்டார். அதன் பின்னர் கிறிஸ்டல் பெலஸுக்கு கிடைத்த குறைந்தது 4 கோல் போடும் வாய்ப்புகள் வீண் போயின.

மாத்தறை சிட்டி கோல் மழை

குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் அநுராதபுரம் சொலிட் கழகத்தை எதிர்த்தாடிய மாத்தறை சிட்டி கழகம் கோல் மழை பொழிந்து  6 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றியீட்டியது.

ஆபிரிக்க வீரர்களின் அற்புதமான ஆற்றல்கள் மாத்தறை சிட்டியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

லார்பி பிறின்ஸ் போட்டியின் 9ஆவது நிமிடத்திலும் பொவாடு பிறின்ஸ் 37ஆவது நிமிடத்திலும் கோல்களைப் போட இடைவேளையின்போது மாத்தறை சிட்டி 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்தது.

இடைவேளையின் பின்னர் 23 நிமிடங்கள் இடைவெளியில் மேலும் 4 கோல்களை மாத்தறை சிட்டி போட்டு மிக இலகுவாக வெற்றியீட்டியது.

மாத்தறை சிட்டியின் 3ஆவது கோலை 65ஆவது நிமிடத்தில் நவோத் விஹங்க போட்டார்.

தொடர்ந்து 73ஆவது நிமிடத்தில் பொவாடு பிறின்ஸ் அணியின் 4ஆவது கோலைப் புகுத்தினார்.

அதன் பின்னர் லார்பி பிறின்ஸ் 79ஆவது, 88ஆவது நிமிடங்களில் மேலும் 2 கோல்களைப் போட்டு மாத்தறை சிட்டியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்த போட்டி முடிவுடன் மாத்தறை சிட்ட தனது 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று அணிகள் நிலையில் 15 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்காவுக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட்...

2024-03-19 15:26:44
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேலி...

2024-03-19 12:05:57
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46