இந்தியாவில் திருடப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான உலகின் முதல் தமிழ் பைபிள் 17 ஆண்டுகளின் பின் லண்டனில் கண்டுபிடிப்பு

Published By: Digital Desk 3

04 Jul, 2022 | 10:07 AM
image

இந்தியாவில் தஞ்சை சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்ட 300 ஆண்டு பழமையான முதல் தமிழ் பைபிள் 2005 இல் மாயமான நிலையில் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

17 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இந்த பைபிள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் முதலில் ஆங்கில மொழியில் மட்டுமே இருந்தது. இதனால் ஆங்கிலம் பேசாத பிற நாட்டு மக்கள் அதனை வாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்பும் வகையில் டென்மார்க் மன்னரின் வேண்டுகோளை ஏற்று ஜேர்மன் நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் பார்தோலோமாஸ் செய்ங்கெங்பால்க் தமிழகம் வந்தார்.

இவர் தமிழகத்தின் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடிக்கு 1706 ஆம் ஆண்டு வந்தார்.

பின்னர் அவர் தமிழை கற்க ஆரம்பித்தார். தமிழ் கற்றுக்கொண்ட மதபோதகர் அச்சகம் நிறுவி இந்திய கலாசாரம் மதம் தொடர்பான புத்தகங்களை தமிழ் மொழியில் அச்சிடத் தொடங்கினார். 1714 ஆம் ஆண்டில் புதிய ஏற்பாடு பைபிளை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து 1715 ஆல் அச்சடித்தார்.

இந்த பைபிள் சரஸ்வதி மஹால் நூலகத்தில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டில் மாயமானது.

இந்நிலையில் தற்போது இந்த பைபிள் லண்டனில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு பைபிளை லண்டனில் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் தான் இந்த விசாரணையின் பின்ணனி தகவல் வெளியாகி உள்ளது. 

அதன் விபரம் வருமாறு:

தரங்கம்பாடியில் தமிழில் அச்சடிக்கப்பட்ட பைபிளானது அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த பைபிள் சரஸ்வதி மஹால் நூலகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இந்த தமிழ் பைபிள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்து 2005 ஆம் ஆண்டில் மாயமானது. யாரோ பைபிளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுபற்றி நூலக நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் கிழக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸார் விசாரணை நடத்தினர். ஆனால் பைபிள் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடித்து வைக்கப்பட்டது.

இதற்கிடையே தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் 2017 ஆம் ஆண்டில் மீண்டும் முறைப்பாடு செய்யப்பட்டது. இதுபற்றி பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

தனிப்படை பொலிஸார் 2005 ஆம் ஆண்டுக்கான பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சரபோஜி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்காக நூலகத்துக்கு வெளிநாட்டினர் சிலர் வந்து சென்றது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வெளிநாட்டு அருங்காட்சியகம், நூலகங்களின் வலைதளங்கள் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின்போது மாயமான தமிழ் பைபிள், சரபோஜி மன்னரின் கையெழுத்துடன் லண்டனில் கிங்ஸ் கலெக்சன் நிறுவனத்தில் இருப்பது தெரியவந்தது.

அதோடு சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பைபிளை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் தமிழில் முதல் மொழிப்பெயர்ப்பு பைபிளை திருடியது யார் ? எப்படி லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது ? என்பது பற்றிய விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

2005 ஆம் ஆண்டில் மாயமான பைபிளை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் வழக்கை முடித்து வைத்த நிலையில் தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17