சீனா­விடம் இருந்து பெறப்­படும் கடன்­களின் வட்டி வீதம் அதிகம் எனில், ஏன் மீண்டும் இலங்கை சீனா­விடம் கடன்­களை கோரு­கி­றது என, இலங்­கைக்­கான சீனத்தூதுவர் சீசியாங் லாங் கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

சில ஊட­கங்கள் மற்றும் அமைச்­சர்கள்

 இந்த கடன்கள் பெறு­மதி அதி­க­மா­னவை என குறிப்­பிட்­டுள்­ளதை, அவ­தா­னித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள அவர், தாம் கடன் வட்டி வீதத்தை 2 வீத­மாக பேணி வரு­வது அனை­வரும் அறிந்­ததே எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

இது­தொ­டர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

இது தொடர்பில் இலங்கை நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பல முறை பகி­ரங்­க­மாக விமர்­சித்­துள்ளார். இது குறித்து நிதி அமைச்­ச­ருடன் நான் பேசி­யுள்ளேன்.

தமக்கு குறைந்­தது 5 வீத வட்­டிக்கு கடன்­களை வழங்­கு­கின்ற போது, ஏன் பிற­நா­டு­க­ளுக்கு 2 வீத வட்­டிக்கு கடன் வழங்க வேண்டும் என எம்­மிடம் சில­நா­டு­களின் வர்த்­த­கர்கள் முறை­யிட்­டுள்ள நிலையில், குறித்த 2 வீத வட்டிக் கடனை இலங்கை விமர்சித்திருப்பது நியாயமற்றது .