கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Published By: Vishnu

03 Jul, 2022 | 12:15 PM
image

(எம்.மனோசித்ரா)

குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் நாளை 04 ஆம் திகதி திங்கட்கிழமை  முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஆரம்பகட்டமாக ஒவ்வொரு பிராந்திய அலுவலகத்திலும் முன்கூட்டியே நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரிகள் 10 பேருக்கு மாத்திரம் இந்த சேவை வழங்கப்படும். 

www.immigration.gov.lk  என்ற இணையதளத்திற்குப் பிரவேசித்து உரிய பிராந்திய அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு நாளொன்றையும் நேரத்தையும ஒதுக்கிக் கொள்ள முடியும்.

மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்கள் மூலம் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக தற்போது விண்ணப்பதாரிகளுக்கு நாட்கள் மற்றும் நேரங்கள் வழங்கப்பட்டிருப்பதனால் அவர்களுக்கும் சேவைகளை வழங்க வேண்டியுள்ளது.

எனவே அந்த அலுவலகங்களில் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு முன்கூட்டியே நாளையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளாதவர்கள் சமூகமளிக்க வேண்டாம்.

மேலும் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள எதிர்வரும் 60 நாட்களுக்கான காலப்பகுதிக்கு திகதியும் நேரமும் ஒதுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

எனவே அவசரமாக தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லவுள்ள விண்ணப்பதாரிகள் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை 070 6311711 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ்அப் செயலி மூலம் அனுப்ப வேண்டு;ம்.

குறித்த இலக்கத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு விரைவில் நாளொன்றும் நேரமும் திணைக்களத்தினால் வழங்கப்படும. சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே துரிதமாக நாளொன்றும் திகதியும் வழங்கப்படும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22