பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு

Published By: Digital Desk 3

02 Jul, 2022 | 02:02 PM
image

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களுக்கு  தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு சமுகமளிக்காவிட்டால், அவர்கள் பதவியை விட்டு வெளியேறியதாக கருதப்படுவர்.

இது குறித்து தபால் தொழிற்சங்கங்களுக்கு இன்று எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என  தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் உப தபால் நிலையங்களும் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரம் இயங்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 26 ஆம் திகதி முதல் தபால் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். 

தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக, வெளிநாட்டுப் பிரிவில் ஏராளமான பொதிகள் குவிந்து கிடப்பதாகவும், இதனால் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் தபால் திணைக்களத்திற்கு  20 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00