(ரொபட் அன்டனி) 

மத்திய வங்கி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் பிரதமருக்கு ஆதரவளிப்போம் என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

சிங்கப்பூர் சென்றுள்ள அர்ஜுன மகேந்திரனின்  வருகை குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. அவர் வராவிடின் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். சட்ட மா அதிபர் திணைக்களத்தின்  நடவடிக்கைக்கு ஏற்ப குற்றம் செய்தவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.