(வத்துகாமம் நிருபர்)

கட்டுகஸ்தோட்டைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவயாலத்தென்னை பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மிதந்து வந்த இனம் தெரியாத சடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகாவலி கங்கையில் இச் சடலம் மிதந்து வருகையில் நவயாலதென்ன என்ற இடத்தில் வைத்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். 

இச்சடலம் சுமார் ஒருவாரகாலத்திற்கு மேலாக பழைமையானது என்றும் பொலிஸார் ஊகிக்கின்றனர். இது ஒரு ஆணின் சடலம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இச் சடலத்தின் பாகங்களை மீன்கள் அல்லது விலங்ககள் சேதப்படுத்தியுள்ளதுடன் சடலம் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இச் சடலம் தொடர்பான மரண விசாரணை இன்று இடம் பெற உள்ளதாகவும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை இனம் காணமுடியாதுள்ளதாகவும் தகவல் தெரிந்தவர்கள் இது விடயமாக கட்டுகஸ்தோட்டைப் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டுகின்றனர்.