உக்ரைன் ரஸ்யா -சீனா தாய்வான் விவகாரங்களை ஒப்பிட்டார் அவுஸ்திரேலிய பிரதமர் - சீன ஊடகங்கள் கடும் பாய்ச்சல்

Published By: Rajeeban

01 Jul, 2022 | 03:35 PM
image

அவுஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ள சீன ஊடகங்கள் அவுஸ்திரேலிய பிரதமர் அறியாமையில் உள்ளார் சீனாவும் அவுஸ்திரேலியாவும்  தங்கள் உறவுகளை சீர்செய்வதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன என தெரிவித்துள்ளன.

சில நாட்களிற்கு முன்னர் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உக்ரைன் மீதான ரஸ்யாவின் நடவடிக்கையை சீனா தாய்வான் பதற்றத்துடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டிருந்தார்.

உக்ரைனை கைப்பற்றும் விடயத்தில் விளாடிமிர் புட்டின் தோல்வியடைந்துள்ளமை  இறைமை உள்ள நாட்டின் மீது படைபலத்தை பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் எதிர்ப்பை சந்திக்கும் என்பதை இது புலப்படுத்தியுள்ளது எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்திருந்தார்.

அவுஸ்திரேலிய பிரதமரின் இந்த கருத்தினை கடுமையாக விமர்சித்துள்ள சீனா டெய்லி அவுஸ்திரேலிய பிரதமரின் கருத்து இராஜதந்திர அணுகுமுறைகள் அரசியல் யதார்த்தங்கள் மீதான அவரது திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் உக்ரைன் குறித்த சீனாவின்  நிலைப்பாட்டை அறியாத அளவிற்கு தவறான தகவல்களை கொண்டவர் என்பதை நம்புவது கடினம்  எனவும் குறிப்பிட்டுள்ள சீனாவின் நாளிதழ் சீனா தனது நிலைப்பாட்டை பல தடவை வெளிப்படுத்தியுள்ளது தாய்வானின் நிலையை அறியாத அளவிற்கு அவர் அறியாதவராகயிருக்கலாம் என ஆசிரிய தலையங்களித்தில் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

தொழிற்கட்சி சீனாவை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கொள்கையை பறைசாற்றிக்கொண்டு அதன் அணியில் ஆர்வத்துடன் இணைந்துள்ளது என சீன நாளிதழ் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஸ்யாவின் மூலோபாய தவறுகளில் இருந்து சீனா பாடம் கற்கவேண்டும் என தெரிவித்துள்ளதை தொடர்ந்து சீனாவின் வெளிவிவகார பேச்சாளரும் அவுஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

இது பொறுப்பற்ற கருத்து உக்ரைன் விவகாரம் தொடர்பில் எங்களின் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் தெரிவித்துவந்துள்ளோம்,தாய்வான் உக்ரைனி;ல்லை ஒப்பிடமுடியாது என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17