ஆவா குழுவின் பின்னணியில் கோத்தபாயவா? ;  அரசாங்கம் சந்தேகம்

Published By: Ponmalar

02 Nov, 2016 | 05:09 PM
image

(ரொபட் அன்டனி)

வடக்கில்  மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது   கடந்த ஆட்சிக்காலத்தில்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோத்தபாய ராஜபக்ஷவின்  அறிவுக்கு எட்டியவகையில்  ஒரு சில மேஜர் தர அதிகாரிகளினால்  உருவாக்கப்பட்டது  என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த ஆவா குழுவானது தற்போது  வடக்கில்  குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில்    முன்னாள் பாதுகாப்பு செயலாளரின்  ஊக்குவிப்புடன் செயற்படுகின்றதா என்ற சந்தேகம்  அரசாங்கத்திற்கு  ஏற்படுகின்றது.   ஆனால் அரசாங்கம் இந்த ஆவா குழுவை முழுமையாக அடக்கியே தீரும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கைது செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால்  சட்டம்  அதனை செய்யும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

அரசாங்க தவகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே     ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27