10 விக்கெட்களால் இலங்கையை இலகுவாக வென்றது அவுஸ்திரேலியா

Published By: Digital Desk 5

01 Jul, 2022 | 03:56 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸை 22.5 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு சுருட்டிய அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர்கள் தமது அணிக்கு மிக இலகுவான 10 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

Marnus Labuschagne takes an excellent diving catch, Sri Lanka vs Australia, 1st Test, Galle, 3rd day, July 1, 2022

காலி சர்வதேச விளையாட்டரங்கில் இரண்டரை தினங்களுக்குள் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பகுதிநேர சுழல்பந்துவீச்சாளரைக்கூட இலங்கை துடுப்பாட்ட வீரர்களால் எதிர்கொள்ள முடியாமல் பொனது.

பொதுவாக உப கண்ட ஆடுகளங்களில் சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு அவுஸ்திரேலியா சிரமப்படும் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கு எதிர்மாறாக அவுஸ்திரேலியாவின் சுழல்பந்துவீச்சில் இலங்கை திணறிப்போனது.

இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 12 இன்னிங்ஸ்களில் 38 ஓவர்களை மாத்திரம் வீசி விக்கெட் எதையும் எடுக்காமல் இருந்த ட்ரவிஸ் ஹெட், இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸில் 2.5 ஓவர்களில் 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.

Nathan Lyon picks up Dimuth Karunaratne for the second time in the match, Sri Lanka vs Australia, 1st Test, Galle, 3rd day, July 1, 2022

அனுபவசாலிகளான தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால் ஆகியோரது விக்கெட்களும் இதில் அடங்கியிருந்தன.

இந்த வெற்றியுடன் 2 போட்டிகளைக் கொண்ட வோர்ன் - முரளிதரன் கிண்ண கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில்  அவுஸ்திரேலியா   முன்னிலை வகிக்கின்றது. அத்துடன் இந்த வெற்றி மூலம் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 12 வெற்றிப் புள்ளிகளை அவுஸ்திரேலியா ஈட்டிக்கொண்டது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரெலியா கடைசி 2 விக்கெட்களை 8 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.

Oshada Fernando was brought in as a Covid sub for Angelo Mathews, Sri Lanka vs Australia, 1st Test, Galle, 3rd day, July 1, 2022

இன்று காலை தமது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்த பெட் கமின்ஸ் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததுடன் நெதன் லயன் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். கடைசியாக ஆட்டமிழந்த மிச்செல் ஸ்வெப்சன் ஒரு ஓட்டம் பெற்றார்.

இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்களை விழ்த்தினார்.

109 ஓட்டங்கள் பின்னிலையில்  இருந்தவாறு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கையின் 10 விக்கெட்களையும் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியமை விசேட அம்சமாகும்.

Mitchell Swepson was soon among the wickets, Sri Lanka vs Australia, 1st Test, Galle, 3rd day, July 1, 2022

இலங்கை இன்னிங்ஸ் நண்பகல் 12 மணிக்கு முடிவுக்கு வந்தபோதிலும் அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்டதால் மதிய போசன இடைவேளை வழங்கப்படாமல் ஆட்டம் தொடரப்பட்டது.

2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கைக் கடந்து 10 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் வோர்னர் ஒரு பவுண்டறி, ஒரு சிக்ஸுடன் 10 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

 அத்துடன் இந்த வெற்றி மூலம் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 12 வெற்றிப் புள்ளிகளை அவுஸ்திரேலியா ஈட்டிக்கொண்டது.  

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் கொவிட் - 19 தொற்றுக்குள்ளான சிரேஷ்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ், இலங்கை குழாத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய விதிகளுக்கு அமைய மெத்யூஸுக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ மாற்றுவீரராக இரண்டாவது இன்னிங்ஸில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1வது இன்னிங்ஸ் 212 (நிரோஷன் திக்வெல்ல 58, ஏஞ்சலோ மெத்யூஸ் 39, திமுத் கருணாரட்ன 28, நேதன் லயன் 90 - 5 விக்., மிச்செல் ஸ்வெப்சன் 55- 3 விக்.)

அவுஸ்திரேலியா 1வது இன்னிங்ஸ் 321 (கெமரன் கிறீன் 77, உஸ்மான் கவாஜா 71, அலெக்ஸ் கேரி 45, ரமேஷ் மெண்டிஸ் 112 - 4 விக்., அசித்த பெர்னாண்டோ 37 - 2 விக்., ஜெவ்றி வெண்டர்சே 68 - 2)

இலங்கை 2வது இன்: 113 (திமுத் கருணாரட்ன 23,  ட்ரவிஸ் ஹெட் 10 - 4 விக்., நேதன் லயன் 31 - 4 விக்., மிச்செல் ஸ்வெப்சன் 34 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 2வது இன்: விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்கள் (டேவிட் வோர்னர் 10 ஆ.இ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58