பணவீக்கம் ஜுனில் 54.6 சதவீதமாக சடுதியாக உயர்வு

Published By: Digital Desk 3

01 Jul, 2022 | 12:45 PM
image

(நா.தனுஜா)

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த ஜுன் மாதம் 54.6 சதவீதமாகக் கணிசமானளவினால் உயர்வடைந்திருக்கின்றது. 

இப்பணவீக்கமானது கடந்த மேமாதத்தில் 39.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது ஜுன் மாதம் 15.5 சதவீத அதிகரிப்பைக் காண்பித்திருக்கின்றது.

கடந்த ஒருமாதகாலத்தில் மரக்கறிகள், உடன்மீன், பாண், அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மற்றும் போக்குவரத்து, நீர், மின்சக்தி, எரிவாயுக் கட்டணங்கள் போன்ற உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இப்பணவீக்க உயர்விற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் தொடர்ச்சியாக பணவீக்கம் மிகவேகமாக அதிகரித்துச்செல்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மதிப்பீட்டின் பிரகாரம் பணவீக்கமானது கடந்த மேமாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுன் மாதம் சடுதியான அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இப்பணவீக்கம் பெரும்பாலும் வழங்கலுடன் (பொருட்கள், சேவைகள் விநியோகம்) தொடர்புடைய காரணிகளாலேயே தூண்டப்பட்டிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் மாதாந்த விலையதிகரிப்பு பணவீக்கம் உயர்வடைவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, கடந்த மேமாதம் 57.4 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப்பணவீக்கம் ஜுன் மாதத்தில் 80.1 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும், மேயில் 30.6 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப்பணவீக்கம் ஜுனில் 42.4 சதவீதமாக உயர்வடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

உடன்மீன், மரக்கறிகள், பாண், அரிசி, பால்மா உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகளில் கடந்த மாதம் கணிசமானளவிலான அதிகரிப்பு அவதானிக்கப்பட்டதாகவும், உணவல்லாப்பொருட்களைப் பொறுத்தமட்டில் போக்குவரத்து, உணவகம், விடுதிகள், கல்விக்கான பிரத்யேக வகுப்புக்கள், வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு ஆகியவற்றின் விலைகள் மற்றும் கட்டணங்கள் உயர்வடைந்ததாகவும் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளைப் பொறுத்தமட்டில், அவற்றில் முறையே 6.81 சதவீதம் மற்றும் 5.99 சதவீதம் என்ற அடிப்படையில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த ஜுனில் 12.80 சதவீதமாகப் பதிவாகியது.

இக்கணிப்பீட்டின்படி பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கமானது கடந்த மேமாதம் 28.4 சதவீதமாகப் பதிவாகியிருந்த போதிலும், அது ஜுன்மாதம் 39.9 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதேவேளை மேமாதம் 10.2 சதவீதமாகப் பதிவான ஆண்டுக்கான சராசரி பணவீக்கம் ஜுனில் 13.3 சதவீதமாக உயர்டைந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜுன் ஆகிய கடந்த 6 மாதகாலப்பகுதியில் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாகக் கணிப்பிடப்பட்ட பணவீக்கமானது முறையே 14.2, 15.1, 18.7, 29.8, 39.1, 54.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. 

இதனை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இவ்வருடத்தின் முதலாம் காலாண்டில் மிதமான அதிகரிப்பைக் காண்பித்த பணவீக்கம், இரண்டாம் காலாண்டில் மிகவும் சடுதியான அதிகரிப்பை - குறிப்பாக மாதாந்தம் 10 சதவீத உயர்வை காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10