சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

Published By: Vishnu

01 Jul, 2022 | 11:43 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கா.பொ.த. சாதாரண பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவிக்கையில்,

எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

முதற் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. எனினும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.

 க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.  அதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் அல்லது  ஆகஸ்ட் முதல் இரு வாரங்களுக்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27