இலங்கை - இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

Published By: Digital Desk 5

01 Jul, 2022 | 10:08 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரங்கிரி தம்புள்ளை விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

India had no answers to Chamari Athapaththu's assault during her 48-ball 80 not out, Sri Lanka vs India, 3rd women's T20I, Dambulla, June 27, 2022

இரண்டு அணிகளுக்கும் இடையில் இந்த மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 2 என்ற ஆட்டங்கள் கணக்கில் தோல்வி அடைந்த இலங்கை, கடைசிப் போட்டியில் ஈட்டிய வெற்றியை அடுத்து மிகுந்த நம்பிக்கையுடன் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தத் தொடரில் இலங்கை அணியால் எதிர்பாராத முடிவுகளை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக பயிற்றுநர் ஹஷான் திலக்கரட்ன தெரிவித்தார்.

'இருபது 20 தொடரின்போது பெறப்பட்ட அனுபவங்களைத் தொடர்ந்து சர்வதேச ஒருநாள் தொடருக்கான எமது தயார்படுத்தல் சிறப்பாக அமைந்தது.

கடைசி இருபது 20 போட்டியில் ஈட்டிய வெற்றி எமது அணிக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. திறமைக்கு ஏற்றவாறு விளையாடினால் இந்தியாவுக்கு எதிராக எம்மால் சில எதிர்பாராத முடிவுகளை ஏற்படுத்த முடியும்' என ஹஷான் திலக்கரட்ன குறிப்பிட்டார்.

Chamari Athapaththu and Harshitha Madavi Samarawickrama share a moment in the middle, Sri Lanka vs India, 3rd women's T20I, Dambulla, June 27, 2022

'இந்திய மகளிர் அணி எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். அவர்களை நாங்கள் நிறைய மதிக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 4ஆம் நிலையில் இருக்கிறது.

எனவே இந்தியாவை வெற்றிகொள்ள வேண்டுமானால் நாங்கள் அதிசிறந்த கிரிக்கெட் ஆற்றலுடன் விளையாட வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

'எமது அணியைப் பொறுத்தமட்டில் நாங்கள் அச்சமின்றி கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். பாகிஸ்தானுடனான தொடரிலும் கடைசியாக சில போட்டிகளிலும் எமது துடுப்பாட்ட வீராங்கனைகள் எம்மை கைவிட்டனர்.

ஆனால், இந்தியாவுடனான கடைசி இருபது 20 போட்டியில் எமது அணி சகல துறைகளிலும் பிரகாசித்து வெற்றிபெற்றது. அதே போன்ற திறமையை இலங்கை வீராங்கனைகளிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எமது பந்துவீச்சை உற்று நோக்கினால் அதில் முன்னேற்றம் இருப்பதை அவதானிக்கலாம். திறமைவாய்ந்த துடுப்பாட்ட வரிசையை கொண்ட இந்திய அணியை 140 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியமை எமக்கு சாகத்தன்மையைக் கொடுக்கிறது' என்றார் திலக்கரட்ன.

Harmanpreet Kaur and Deepti Sharma steered India at the end,

சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி இன்றைய போட்டியிலும் தொடரிலும் திறமையாக விளையாடுவது அவசியம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

மறுபுறத்தில் ஹார்மன்ப்பரீத் கோர் தலைமையிலான இந்தியா, இருபது 20 தொடரில் போன்று சர்வதேச ஒருநாள் தொடரிலும் வெற்றிபெற முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்திய அணியில் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைகளும் பந்துவீச்சாளர்களும் இருக்கின்றனர்.

அணிகள்

இலங்கை: சமரி அத்தபத்து (தலைவர்), நிலக்ஷி டி சில்வா, காவிஷா டில்ஹாரி, விஷ்மி குணரட்ன, அமா காஞ்சனா, ஹன்சிமா கருணாரட்ன, அச்சினி குலசூரிய, சுகந்திகா குமாரி, ஹர்ஷித்தா சமரவிக்ரம, ஹசினி பெரேரா, உதேஷிக்கா ப்ரபோதனி, ஓஷாதி ரணசிங்க, இனோக்கா ரணவீர, சத்யா சந்தீப்பனி, அனுஷ்கா சஞ்சீவனி, மல்ஷா ஷெஹானி, தாரிக்கா செவ்வந்தி

இந்தியா: ஹார்மன்ப்ரீத் கோர் (தலைவர்), சிம்ரன் பஹதூர், யஸ்டிக்கா பாட்டியா, தானியா பாட்டியா, ஹார்லீன் டியோல், ராஜேஷ்வரி கயக்வாட், ரிச்சா கோஷ், ஸ்ம்ரித்தி மந்தானா, சபனேனி மேகனா, மெக்னா சிங், பூணம் யாதவ், ரேணுகா சிங், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரேக்கார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35