(பா.ருத்ரகுமார்)

நாட்டில் நடைபெறும் சாதாரண நிகழ்வுகள் வடக்கில் நடந்தால் மட்டும் பூதாகரமாக்கப்படுகின்றது. அதுபோலவே சாதாரண வாள்வெட்டு சம்பவங்களையும் பொலிஸ் தாக்குதல்களையும் அரசியலாக்கி இலாபம் தேட முனைவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

மேலும் யாழில் இறந்த இரு பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோரே குறித்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கூறியுள்ள நிலையில் உலகிலேயே முதன்முதல் நடந்த சம்பவமாக இவ்விடயத்தை சித்தரிக்க முனைவது தவறான விடம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேல்மாகாண முதலமைச்சரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இன்ற இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.