இலங்கை பாடசாலைகள் றக்பி போட்டி : 19 வயதுக்குட்பட்ட ஏ பிரிவு இரண்டாம் கட்ட போட்டிகள் இன்று 

Published By: Digital Desk 5

01 Jul, 2022 | 09:40 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட ஏ பிரிவு இரண்டாம் கட்ட றக்பி போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

தத்தமது ஆரம்பப் போட்டிகளில் வெற்றியீட்டிய திரித்துவம், இஸிபத்தன, றோயல் ஆகிய கல்லூரிகள் தமது வெற்றி அலையை தொடர்வதற்கு இன்றைய இரண்டாம் கட்டப் போட்டிகளில்   முயற்சிக்கவுள்ளன.

கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரிக்கும் கண்டி திரித்துவ கல்லூரிக்கும் இடையிலான போட்டி நித்தவளையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

கடந்த வாரம் கொழும்பில் றோயல் கல்லூரிக்கு கடும் சவால்  விடுத்து தோல்வி அடைந்த புனித அந்தோனியார் இன்றைய போட்டியில் திரித்துவ அணியை வெற்றிகொள்ள முயற்சிக்கவுள்ளது.

திரித்துவ கல்லூரி தனது ஆரம்பப் போட்டியில் சென். தோமஸ் கல்லூரியை வெற்றிகொண்டிருந்தது.

பொதுவாக இந்த இரண்டு கல்லூரிகளுக்கு இடையிலான றக்பி வரலாற்றில் திரித்துவ கல்லூரியே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

எனினும் இம்முறை போட்டி நித்தவளையில் நடைபெறுவதால் புனித அந்தோனியார் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு அணிகளும் இதே மைதானத்தில் கடைசியாக மோதிக்கொண்டபோது திரித்துவ கல்லூரி வெற்றிபெற்றிருந்தது.

புனித அந்தோனியார் அணிக்கு ஜெயன் அமரசிங்க தலைவராக விளையாடுவதுடன் சுமேத மாலவன பயிற்சி அளித்துவருகிறார்.

திரித்துவ அணியின் தலைவராக லிம்மல் மொரகொட விளையாடவுள்ளதுடன் காவிந்த ஜயசேன பயிற்றுநராக செயற்படுகின்றார்.

இஸிபத்தன - வெஸ்லி

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் இஸிபத்தன - வெஸ்லி அணிகள் மோதவுள்ளன.

கடந்த வாரம் வித்யார்த்தவை மிக இலகுவாக வெஸ்லியும் விஞ்ஞான கல்லூரிக்கு எதிரான போட்டியில்  இறுக்கமான வெற்றியை இஸிபத்தனவும் பெற்றிருந்தன.

இந்த இரண்டு அணிகளிலும் அதிசிறந்த வீரர்கள் இடம்பெறுவதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்லி அணிக்கு தாருஷ ஜயவீரவும் இஸிபத்தன அணிக்கு தஹான் விக்ரமஆராச்சியும் தலைவர்களாக விளையாடுகின்றனர்.

இதேவேளை, றோயல் கல்லூரிக்கும் கிங்ஸ்வூட் கல்லூரிக்கும் இடையிலான மேலும் ஒரு போட்டி றோயல் விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற புனித அந்தோனியார் அணியுடனான போட்டியில் றோயல் சற்று கடினமான வெற்றியை ஈட்டியிருந்தது. கிங்ஸ்வூட் தனது போட்டியில் புனித சூசையப்பர் அணியிடம் படு தோல்வி அடைந்திருந்தது.

இப் போட்டியில் றோயலுக்கு அனுகூலமான முடிவு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பாடசாலைகள் றக்பி போட்டிகளுக்கு டயலொக்  ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணை வழங்குகிறது.

(பட உதவி: திபப்பரே.கொம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35