காலி மைதானத்தை புரட்டிப்போட்ட காற்றுடன் கூடிய மழை : கவாஜா, கிறீன் அரை சதங்கள் ; 101 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில்

30 Jun, 2022 | 09:04 PM
image

(என்.வீ.ஏ.)

இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது வோர்ன் - முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 313 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

உஸ்மான் கவாஜா, கெமரன் கிறீன் ஆகியோர் குவித்த அரைச் சதங்களின் பலனாக இலங்கையை விட 101 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கின்றது.

காலியில் இன்று காலை பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் மூன்றேமுக்கால் மணி நேரம் தாமதித்து ஆரம்பமானது.

அத்துடன் தற்காலிகமாக போடப்பட்டிருந்ருந்த கொட்டகையின் கூரையும் சரிந்து வீழ்ந்தது.

98 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்கள் என்ற நிலையிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பலமான நிலையை அடைந்தது.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 7 ஓட்டங்கள் சேர்ந்தபோது தனஞ்சய டி சில்வாவின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ட்ரவிஸ் ஹெட் (6) ஆட்டமிழந்தார்.

எனினும் உஸ்மான் கவாஜாவும் கெமரன் கிறீனும் 5ஆவது விக்கெட்டில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது கவாஜாவின் விக்கெட்டை ஜெவ்றி வெண்டர்சே வீழ்த்தினார்.

தனது அறிமுக டெஸ்டில் விளையாடும் வெண்டர்சே வீழ்த்திய முதலாவது விக்கெட் இதுவாகும்.  

130 பந்துகளை எதிர்கொண்ட கவாஜா 7 பவுண்டறிகளுடன் 71 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து கெமரன் கிறீன், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் இலங்கையின் மொத்த எண்ணிக்கையை கடக்க உதவியதுடன் 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 84 ஓட்ட்ங்களைப் பகிர்ந்தனர்.

அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் சந்திமாலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

மொத்த எண்ணிக்கை 278 ஓட்டங்களாக இருந்தபோது கெமரன் கிறீன், மிச்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கெமரன் கிறீன் 109 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்று ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் எல்பிடபிய்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

மிச்செல் ஸ்டார்க் 10 ஓட்டங்களுடன் வெண்டர்சேயின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அணித் தலைவர் பெட் கமின்ஸ் 16 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி அடங்கலாக 26 ஓட்டங்களுடனும் நேதன் லயன் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58