பிரதேச செயலாளர் வைத்தியசாலை ஊழியர்களால் தடுத்துவைத்து சித்திரவதை : நீதி அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

Published By: Vishnu

30 Jun, 2022 | 06:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மாத்தறை பிரதேச செயலாளர் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்றிருந்த வேளை, சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் அனுமதி பத்திரம் வழங்கவில்லை என குறிப்பிட்டு அவரை தடுத்துவைத்து சித்திரவதை செய்தமை தொடர்பாக பூரண விசாரணை மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் பொலிஸ்மா அதிபரிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு அவர் அனுப்பி இருக்கும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாத்தறை பிரதேச செயலாளர் கடந்த 25ஆம் திகதி சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்றிருந்த வேளை, சுகாதார ஊழியர்கள் தங்களுக்கு எரிபொருள் அனுமதி பத்திரம் வழங்கவி்லலை என தெரிவித்து அவரை தடுத்துவைத்து, சித்திரவதை செய்திருப்பதாக, அரச அதிகாரிகள் பலரிடம் இருந்து எனக்கு முறைப்பாடு வந்திருப்பதுடன் ஊடகங்கள் ஊடாகவும் இந்த சம்பவம் அறிக்கை இடப்பட்டு, பாரியதொரு பிரசாரத்தை வழங்கி இருக்கின்றது.

குறிப்பாக அரச வைத்தியசாலை ஒன்றில் இவ்வாறான அநாகரிகமான, மிலேச்சத்தனமாக நடவடிக்கை ஒன்றை ஏற்படுத்தியமை தொடர்பில் காரணம் சொல்வதற்கு இயலாது.

நோயாளர்களின் நலனுக்காக முடியுமானளவு செயற்படுவதாக உறுதிப்பிரமாணம் வழங்கி இருக்கும் வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் நிர்வாகிகள் இதுதொடர்பில் பொறுப்புக்கூறவேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு, இதனுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கு எதிராகவும் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

அத்துடன் விசாரணை அறிக்கையின் பிரதியை சட்டமா அதிபர், சுகாதார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55