'கனல்' ஓடியோ வெளியீடு

Published By: Vishnu

30 Jun, 2022 | 06:37 PM
image

புதுமுக நடிகர் ஜெய் பாலா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கனல்' திரைப்படத்தின் ஓடியோ வெளியிடப்பட்டது. இதனை தமிழ் திரை உலகின் மூத்த நடிகர்களுள் ஒருவரான டத்தோ ஸ்ரீ ராதா ரவி வெளியிட்டார்.


அறிமுக இயக்குநர் சமய முரளி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கனல்'. இதில் ஜெய் பாலா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காவ்யா பெல்லு நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ஜான் விஜய், சுவாதி கிருஷ்ணன், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தென்மா மற்றும் சதீஷ் சக்கரவர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை தி நைட்டிங்கேல் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் நடிகர் ஜெய் பாலா தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

'' அடித்தட்டு மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படம் அவர்களிடத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் அளவிற்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நடன இயக்குநர் ஸ்ரீதர் சென்னை பற்றிய கானா பாடலுக்கு நடனம் அமைத்து நடித்திருக்கிறார். இது பார்வையாளர்களை கவரும் என நம்புகிறேன். '' என்றார்.

படத்தின் இசையை வெளியிட்டு டத்தோ ஸ்ரீ ராதா ரவி பேசுகையில், '' அடித்தட்டு மக்களின் பிரச்சனையை இயக்குநர் திரைப்படமாக உருவாக்கி இருப்பதால்.. அவருடைய இந்த சிந்தனைக்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமையும். திரைப்படத்துறையில் பணியாற்றும் அனைவரும் சினிமாவை நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதே தருணத்தில் ஒற்றுமையாக இருப்பது முக்கியம்.'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35