கொன்சியூலர் அலுவலகம் வியாழன், செவ்வாய் கிழமைகளில் இயங்காது - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

Published By: Digital Desk 3

30 Jun, 2022 | 09:19 AM
image

பொதுமக்களுக்கான கொன்சியூலர் சேவைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மாத்திரமே நடைபெறும். செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற மாட்டாது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அது தொடர்பில் அமைச்சின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப்  பிரிவு, 2022 ஜூன் 30 முதல் 2022 ஜூலை 10 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும். 

மேலும், யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்பதுடன், அந்த அலுவலகங்களும் இந்த நாட்களிலேயே சேவைகளை வழங்கும்.

அவசர விசாரணைகளுக்காக பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளினூடாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள்  கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

கொன்சியூலர் விவகாரப் பிரிவு - கொழும்பு - consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - யாழ்ப்பாணம் - jaffna.consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - மாத்தறை - matara.consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - கண்டி - kandy.consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - திருகோணமலை - trincomalee.consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - குருநாகல் - kurunegala.consular@mfa.gov.lk ஆகிய மின்னஞ்சல்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54