இலங்கை - அவுஸ்திரேலியா : முதல் டெஸ்டின் ஆரம்ப நாளில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் 

Published By: Digital Desk 4

29 Jun, 2022 | 08:18 PM
image

(என்.வீ.ஏ.)

அவுஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (29) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Pat Cummins bowled a spectacular spell, Pakistan v Australia, 3rd Test, Lahore, 3rd day, March 23, 2022

இப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மறைந்த ஷேன் வோர்னுக்கு கௌரவ அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிக் ஹொக்லி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன நிர்வாக உத்தியோகத்தர்கள், இரண்டு அணிகளது வீரர்கள், அதிகாரிகள், மத்தியஸ்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஷேன் வோர்னின் படம் பொறித்த நினைவுச் சின்னம் அவுஸ்திரேலிய பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

இலங்கை துடுப்பாட்டத்தில் ஐவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

நிரோஷன் திக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ் ஆகிய இருவரும் 7 ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் இலங்கை மேலும் மோசமான நிலையை அடைந்திருக்கும்.

நிரோஷன் திக்வெல்ல திறமையாகத் துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களையும் ரமேஷ் மெண்டிஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்களைவிட ஏஞ்சலோ மெத்யூஸ் 39 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 28 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் நேதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மிச்செல் ஸ்வெப்சன் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

உஸ்மான் கவாஜா, டேவிட் வோர்னர் ஆகிய இருவரும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

டெவிட் வோர்னர் 25 ஓட்டங்களுடனும் மார்னுஸ் லபுஸ்சான் 13 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

உஸ்மான் கவாஜா 47 ஓட்டங்களுடனும் ட்ரவிஸ் ஹெட் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22