அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளை சந்தித்தது பிரதான எதிரணி - பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு

Published By: Vishnu

29 Jun, 2022 | 08:08 PM
image

(நா.தனுஜா)

அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழுவையும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவையும் இன்று 29 ஆம் திகதி சந்தித்த சஜித் பிரேமதாஸ தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

 அமெரிக்க திறைசேரியின் ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபேர்ட் கப்ரொத் மற்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் கெலி கெய்டெலிங் ஆகியோரை உள்ளடக்கிய அமெரிக்க உயர்மட்டக்குழு கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைந்தது.

 இந்தக்குழு 29 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர், பொருளியலாளர்கள், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்ததுடன் அவற்றின்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது. 

அதன்படி அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழுவிற்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் கட்சி உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம், எரான் விக்ரமரத்ன ஆகியோரடங்கிய குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. 

இச்சந்திப்பின்போது பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்போருக்காக இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவித்த எதிர்க்கட்சியினர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர். 

அதேவேளை இலங்கையில் இருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பொருளாதார நிலைவரம் குறித்தும் பொருளாதார மீட்சியை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01