மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம் : வழக்கு  விசாரணைகள் ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

29 Jun, 2022 | 07:54 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில்  கைதுசெய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும்  ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.  

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு : 16 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் |  Virakesari.lk

 

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள்  நேற்று ( 28) கேகாலை மேல் நீதிமன்றில் நீதிபதி  ஜகத் கஹந்தகமகே தலைமையிலான  ஜயகி டி அல்விஸ் மற்றும்  இந்திகா காலிங்கவங்ச ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 

இதன்போது, இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரிகையை திருத்துவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருந்தன.

எனினும் இவ்வழக்கில் ஆஜராகும் அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேரா, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக  மன்றில் ஆஜராகவில்லை.

இவ்வாறான பின்னணியிலேயே வழக்கு விசாரணைகள்  7 ஆம்  திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்பகுதியில் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவனெல்லை திதுல்வத்தையிலும் ஏனைய இடங்களிலும் ஐந்து புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பில் 16 பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 இவ்வழக்கில்  வழக்குத் தொடுநர் சார்பில் இந்த வழக்கில்,  அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேரா தலைமையில், சட்டவாதிகளான  ஹரீந்ர ஜயசிங்க, உதார கருணாதிலக, சஜின் பண்டார ஆகியோர் ஆஜராகின்றனர்.

1,2,5,12,13,16 ஆம் பிரதிவாதிகளுக்காக  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தலைமையில் சட்டத்தரணிகளான  எம்.சி.எம். முனீர்,  எம்.ஐ.எம். நளீம், ரிஸ்வான் உவைஸ் உள்ளிட்டோர் ஆஜராகின்றனர்.

3,4,14 ஆம் பிரதிவாதிகளுக்காக  சட்டத்தரணி முபீனுடன் சட்டத்தரணி சஷிக பெரேரா ஆஜராகின்றனர்.

15 ஆம் பிரதிவாதிக்காக சட்டத்தரணி சம்பத் ஹேவாபத்திரணவும் சட்டத்தரணி அவ்தானும் ஆஜராகினர். 9 ஆம் பிரதிவாதிக்கு சட்டத்தரணி துஷாரி வராபிட்டியவுடன் சட்டத்தரணி  கஸ்ஸாலி ஹுசைன் ஆஜராகிறார்..6,7,8,10 மற்றும் 11 ஆம் பிரதிவாதிகளுக்காக  சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜராகின்றார்.

இந் நிலையிலேயே  வழக்கின் சாட்சி விசாரணைகளை  எதிர்வரும் 2022   ஜூலை  மாதம் 7 ஆம்  திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தலை தடுப்பது தொடர்பிலான சர்வதேச இணக்காப்பாட்டு சட்டத்தின் கீழும்  21 குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

இரு சமூகங்களிடையே மோதலை உருவாக்க சதித் திட்டம் தீட்டியமை, 5 புத்தர் சிலைகளை தகர்த்தமை,  சமூகங்களிடையே வெறுப்புணர்வுகளை தூண்டியமை, தோப்பூர் மாவனெல்லை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பகுதியில் அதற்கான வதிவிட கருத்தரங்குகள் மற்றும் ஆயுதப் பயிற்சியினைப் பெற்றமை தொடர்பில் பயங்ரவாத தடை சட்டத்தின் கீழும்,  ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்தரங்குகளுக்கு தேவையானவற்றை நேரடியாகவும் மறைமுகமகும் வழங்கியமை தொடர்பில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும்  குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் முறைப்பாட்டாளர் அறியாதவர்களுடன் இணைந்து பிரதிவாதிகள் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்களையும், 92 சாட்சியாளர்களின் பட்டியலையும் சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகையில் இணைத்துள்ளார்.

 மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக், மொஹம்மட் பைசர் மொஹம்மட் முப்தி,  மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப்,  மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத், மொஹம்மட் அஸ்ஹர் அதீக் அஹமட்,  நஜிமுதீன் மொஹம்மட் பெளசான்,  ரஷீத் மொஹம்மட் இப்ராஹீம் அல்லது இப்ராஹீம் மெளலவி அல்லது இப்ராஹீம் சேர், அபூ செய்த் எனும்  மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் மெளலவி,  அபூ நஜா எனபப்டும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி, அபூ பலாஹ் எனபப்டும் மொஹம்மட்  இம்ராஹீம் சாஹித் அப்துல் ஹக், அபூ உமர் எனபப்டும் மொஹம்மட் இப்ராஹீம்  சாதிக் அப்துல்லாஹ், அபூ ஹினா  அல்லது சிவப்பு தாடி என அறியபப்டும் மொஹம்மட் ஹனீபா சைனுல் ஆப்தீன்,  ஹிஸ்புல்லாஹ் கான் ஹாமித், அபூ சியா எனபப்டும் ஹயாத்து மொஹம்மது அஹமது  மில்ஹான், ஹாஜா மொஹிதீன்,  ஹனன் ஹம்சுதீன் எனும் ஹனன்  ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02