விம்பிள்டன் டென்னிஸில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகத்தில் செரீனா

Published By: Digital Desk 5

29 Jun, 2022 | 04:22 PM
image

(என்.வீ.ஏ.)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகம் செரினா வில்லியம்ஸை சூழந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியதன் காரணமாகே இந்த சந்தேகம் அவரை சூழ்ந்துள்ளது.

ஆனால், இந்தத் தோல்வி எதிர்கால மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளுக்கு உந்துதலாக இருப்பதாகவும் இன்னும் பல கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

23 தடவைகள் கிராண்ட் ஸ்லாம் சம்பியன்  பட்டங்களை   சுவீகரித்துள்ள 40 வயதுடைய செரினா வில்லியம்ஸ் நேற்று நடைபெற்ற சீமாட்டிகளுக்கான ஒற்றையர்முதலாம் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டானிடம் 2 - 1 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்தார்.

அப் போட்டியில் விடாமுயற்சியுடன் விளையாடிய 24 வயதான ஹார்மனி டான் 7 - 5, 1 - 6, 7 (10) - 6 (7) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று செரினா வில்லியம்ஸை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தார்.

அகில இங்கிலாந்து கழகத்தில் இது அவரது கடைசி சந்தரப்பமாக இருக்கமா என செரினாவிடம் கேட்டபோது, 'இந்த கேள்விக்கு என்னால் பதில் கூறமுடியாது. எனக்குத் தெரியவில்லை. எனது பயணம் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்?' என பதிலளித்தார்.

'பெரும்பாலும் இல்லை என்றுதான் கூறுவேன். நிச்சயமாக இல்லை' என தொடர்ந்து பேசிய அவர் குறிப்பிட்டார்.

'என்னால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்துபார்த்தேன். நாளை இதனை விட என்னால் சிறப்பாக செய்யக்கூடியதாக இருக்கும். ஒரு வாரத்துக்கு முன்னர் இதனை விட சிறப்பாக செய்திருக்க முடியும். ஆனால், இன்று என்னால் இவ்வளவுதான் செய்ய முடிந்தது. ஒரு கட்டத்தில் அதனையிட்டு திருப்தி அடைந்துதான் ஆகவேண்டும்' என செரினா மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49