செலான் வங்கி CMO ஆசியா விருதுகளை வென்றது.!

Published By: Robert

02 Nov, 2016 | 01:45 PM
image

சமூக வலைத்தள மற்றும் டிஜிட்டல் ஊடகத்துறையில் இலங்கையின் வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் முன்னணி வகிக்கும் செலான் வங்கி அதன் டிஜிட்டல் இருப்பை பாராட்டி பல உள்ளூர் மற்றும் சர்வதேச விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடமும் அதன் விருதுப் பட்டியலில் அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற சமூக வலைத்தளம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலுக்கான CMO ஆசியா விருதுகளின் போது இரு தங்கம் மற்றும் இரு சிறப்பு விருதுகளை இணைத்துக் கொண்டது.

செலான் வங்கி அதன் தனித்துவ முறையிலான 24x7, உடனடி தீர்வுகளை வழங்கும் டிஜிட்டல் சார் வாடிக்கையாளர் சேவைத்தளங்களிற்காக தங்க விருதை பெற்றுக்கொண்டது. செலானின் டிஜிட்டல் சார் சமூக வாடிக்கையாளர் சேவையை Facebook  messenger, 0772008888 ஊடான WhatsApp hotline அதன் இணையத்தளமான www.seylan.lk ஊடான online chat சேவை ஆகியவற்றின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

Facebookஇன் சிறந்த பயன்பாட்டிற்காக வங்கியின் Facebook பக்கம் தங்கத்தை பெற்றுக்கொண்டது. சமூகம்சார் உறவை வளர்க்கும் வங்கியின் fb பக்கம் அதன் வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய உறவை பேணி வருகிறது. www.facebook.com/SeylanBankஇன் ஊடாக இயங்கும் Facebook பக்கம் சுவாரஸ்யமான உள்ளடக்கம், இணைந்து செயற்படக்கூடிய apps மற்றும் gamification, சேவைகள் தொடர்பான தகவல்கள், சிறப்பு ஊக்குவிப்புக்கள் மற்றும் ரசிகர்களுடனான உடனடி தொடர்பு ஆகிய 6 தூண்களின் கீழ் செயற்படுகிறது. இப்பக்கம் 476,000 இற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளதுடன் ஏனைய சமூக வலைத்தளங்களான Instagram, Twitter, LinkedIn மற்றும் Snapchat ஆகியவற்றிலும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது.

வங்கி சிறந்த இணையத்தளம் மற்றும் சந்தைப்படுத்தலில் சமூக வலைத்தளத்தின் சிறந்த பயன்பாடு ஆகியவற்றிற்காக சிறப்பு சான்றிதழை பெற்றுக் கொண்டது. அண்மையில் மீள் அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம் வாடிக்கையாளரின் வசதி கருதி online calculator> online real time chat> செலான் டிக்கிரியில் அதன் அடுத்த பரிசு என்ன என்பதை கண்டறியும் gift calculator> onlineஇல் கணக்கை ஆரம்பிக்கும் வசதி மற்றும் வங்கியின் சேவைகள் தொடர்பான தொடர்ச்சியான மேம்படுத்தல் மூலம் வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுகிறது.

செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியல் பிரதி பொது முகாமையாளர் திலான் விஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களின் தேவை கருதி டிஜிட்டல் தளத்தில் எமது பங்குதாரர்களுடன் நெருங்கிய தொடர்பை பேண செயற்படும் எமது குழுவின் புத்தாக்கத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தை எண்ணி பெருமகிழ்ச்சியடைகிறோம். நாம் தொடர்ந்து எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்க்கவுள்ளதோடு எமது உண்மையான வெற்றி வங்கிச் சேவைகளை சௌகரியமாக பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வசதியளிப்பது ஆகும்.” என்றார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த வங்கி  பொறுப்புகள்/சேவை மற்றும் புதிய தொழிநுட்ப ஊடகம் ஆகியவற்றின் தலைமை முகாமையாளர் திரு. டினேஷ் ஜெபமணி, “இவ்விருதுகளை வெற்றி கொள்வதில் பெருமையடைவதுடன் சமூக வலைத்தள செயற்பாட்டிற்கு Loops Solutions> இணையத்தளம் மற்றும் தொடர்பாடலிற்கு E-Futures மற்றும் எமது chat சேவைக்கு Scicom  lanka (Pvt ) Ltd ஆகியவற்றின் இணைந்த கூட்டு முயற்சி ஊடாகவே இதனை அடைந்துள்ளோம். நாம் தொடர்ந்து புதிய தீர்வுகளை முன்னெடுத்து எமது online சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை பேணுவோம்.” என்றார்.

செலான் வங்கி இலங்கையின் வங்கியியல் மற்றும் நிதியியல் துறையின் சமூக வலைத்தள தரத்தை நிர்ணயித்து இருப்பதுடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையை வழங்கி வருகிறது. இற்றைக்கு செலான் வங்கி 20இற்கும் மேற்பட்ட விருதுகளை அதன் சமூக வலைத்தள மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலுக்காக வென்றிருப்பதுடன் தொடர்ந்தும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தீர்வுகளை வழங்குகிறது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58