புத்தரின் சிலையை நிறுவத் தடை செய்தவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: Digital Desk 3

29 Jun, 2022 | 10:18 AM
image

(எம்.நியூட்டன்)

குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 13 ஆம் திகதி குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அந்த செயற்பாடு போராட்டம் மூலம் தடுக்கப்பட்டது. 

இந்நிலையில் 15 ஆம் திகதி அந்த போராட்டத்தில் ஈடுபட்டவரை அச்சுறுத்தும் வகையில் இனந்தெரியாத நபர்கள் செயல்பட்டனர். 

குறித்த நபர் தனது வழமையான பணிகளை ஆற்றிவிட்டு வீட்டுக்குள் செல்லும் போது இரண்டு இனந்தெரியாத நபர்கள் மூலம்  துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டார்.

அவர்கள் இரண்டு பேரும் அருகிலுள்ள இராணுவ முகாமுக்குள் சென்றனர். இந்தப் பிரச்சினைக்கு பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவர்  இடம்பெயர்ந்துவேறுபகுதியில் வசிக்கின்றார்.

இது பற்றி பொலிஸாருக்கு அவர் முறைப்பாட்டை செய்திருந்ததுடன் எங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு இந்த விடயங்களை பதிவு செய்திருந்தார்.

அத்துடன் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முற்பட்டபோது முல்லைத்தீவை சேர்ந்தவர் என்ற வகையில் வவுனியாவிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. 

உள்பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் சரத்வீரசேகர , எமது கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரனின் பெயரை பதிவு செய்ததுடன் ஏனைய தமிழ் தரப்புகளை பொதுமக்களையும் தமிழ் அடையாளங்களை பாதுகாக்க இடங்களை பாதுகாக்க முற்படுகின்றவர்களையும் மிக மோசமான முறையில் பாராளுமன்றத்தில் அச்சுறுத்தியிருந்தார்.

இது தொடர்பாக இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் அரசாங்கம் அடுத்ததாக தெரியவில்லை. ஜெனிவாவுக்கு ஜூலை மாதம் சென்ற பல கதைகளைக் கூற இருக்கும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்போதைய நாட்டின் சூழலிலும் தமிழ் தேசத்தை அழிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் முனைப்பாக செயற்படுகின்றது என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நபரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52