திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார். 

‘பிரேமம்’ மலையாளப் படத்தில் மலர் ஆசிரியர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இதில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சாய்பல்லவி டுவிட்டரில் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், உங்கள் திருமணம் காதல் திருமணமா? பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், “நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். ஏனென்றால் என் பெற்றோரை எப்போதும் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

அவருக்கு பிடித்தவை பற்றி கேட்ட கேள்விகளுக்கு, தற்போது ‘ரெமோ நீ காதலன்...’ பாடல் பிடிக்கும். சூர்யாவின் படங்களில் பிடித்தது ‘காக்க காக்க’ என்று தெரிவித்தார். நடிகை, டான்சர், டாக்டர் ஆகியவற்றில் அவருக்கு பிடித்தமானது எது? என்று கேட்ட போது, “தெரியவில்லை. ஆனால் நோயாளிகள் முகத்தில் சிரிப்பு வரும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்.

உங்களுக்கு பிடித்தது சிக்கன் பிரியாணியா? மட்டன் பிரியாணியா? என்ற ரசிகரின் கேள்விக்கு ‘நான் சைவம்’ என்று கூறி இருக்கிறார்.