பாகிஸ்தானில் கொடூரம்; போலியோ தடுப்புக் குழு மீது துப்பாக்கிச்சூடு- 3 பேர் பலி

Published By: Rajeeban

28 Jun, 2022 | 05:26 PM
image

பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் மட்டும் 8 பேருக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டது உலக அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நாடு முழுவதும் போலியோ தடுப்பு திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியது.

இதன்படி, வீடு வீடாக போலியோ தடுப்பு மருந்து போட குழு அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சுமார் 4 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்துடன் பணியாளர்கள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின மாவட்டத்தில் போலியோ தடுப்புக் குழு மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கைபர் - பக்துன்க்வா மாகாண முதல் மந்திரி மெகமூத் கான், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். போலியோ குழு தாக்குதல் நடத்தியவர்கள் குழந்தைகளின் எதிரி" என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07