ராதிகா குமாரசுவாமி எத்தியோப்பியா தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் நிபுணர் குழுவின் உறுப்பினராக நியமனம்

Published By: Digital Desk 5

28 Jun, 2022 | 05:21 PM
image

(நா.தனுஜா)

எதியோப்பியா தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் நிபுணர் குழுவின் உறுப்பினராக இலங்கையைச்சேர்ந்த ராதிகா குமாரசுவாமி நியமிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெட்ரிகோ விலெகஸ் (28) செவ்வாய்கிழமை அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மேற்குறிப்பிட்ட குழுவின் உறுப்பினர்களாக கென்யாவைச்சேர்ந்த காரி பெற்றி முருங்கி மற்றும் அமெரிக்காவைச்சேர்ந்த ஸ்டீவென் ரற்னர் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் (2) நியமிக்கப்பட்ட நிலையிலேயே மூன்றாவதாக இலங்கையைச் சேர்ந்த ராதிகா குமாரசுவாமி நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இக்குழுவின் உறுப்பினராகக் கடமையாற்றிய ஃபற்றோ பென்சூடா கடந்த (8) பதவி விலகியதையடுத்தே இந்த நியமனம் இடம்பெற்றிருக்கின்றது.

எதியோப்பியாவில் கடந்த 2020 நவம்பர் மாதத்திலிருந்து இடம்பெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான மற்றும் அகதிகள் சட்டமீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கடந்த 2021 டிசம்பர் 17 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் சர்வதேச மனித உரிமைகள் நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டது.

ராதிகா குமாரசுவாமி மனித உரிமைகள் சட்டத்தரணி என்ற ரீதியில் பலவருடகால அனுபவத்தைக் கொண்டிருப்பதுடன், அவர் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35