மன்னாரில் அமைக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையின் முகாம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பரயனாளங்குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் தளபதி, பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் படையணியின் இடத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இடத்தினை தேசிய இளைஞர் சேவைகள் ஆணைக்குழு கோரியதற்கிணங்க குறித்த முகாம் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரயனாளங்குளத்தில்  குறித்த முகாமுக்காக 38 ஏக்கர் நிலப்பரப்பு சட்ட ஒழுங்கு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த இடமாற்றத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லையென  விசேட அதிரடிப்படையின் தளபதி தெரிவித்துள்ளார்.