வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் குடும்பப் பின்னணி அறிக்கையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

Published By: Digital Desk 3

28 Jun, 2022 | 04:05 PM
image

(எம்.மனோசித்ரா)

பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குடும்பப் பின்னணி அறிக்கை தொடர்பான தேவையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்கு 5 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் தற்போது நிலவுகின்ற 'குடும்பப் பின்னணி அறிக்கை' சமர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை காணப்படுகிறது.

பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச அறிக்கைகள் பலவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அவ்வாறே ஒருசில சந்தர்ப்பங்களில் குறித்த அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக தேவையான அனைத்துத் தகைமைகளையும் பூர்த்தி செய்திருப்பினும், ஒருசில அலுவலர்கள் பல்வேறு காரணங்களால் குறித்த அறிக்கையைத் தாமதப்படுத்துவதால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்வதற்கு எதிர்பார்க்கின்ற பெண்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையை சமர்ப்பித்தற்குத் தகைமையற்ற ஒருசில பெண்கள் வேறு சட்டவிரோத வழிமுறைகளைக் கையாண்டு எந்தவொரு கண்காணிப்புக்களும் இன்றி வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

இது தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, 2 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளைகள் உள்ள பெண்கள் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கட்டாயமாகக் குடும்பப் பின்னணி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனும் தேவையிலிருந்து விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01