(வத்துகாமம் நிருபர்)

கண்டி அலவத்துகொடை பொலிஸ் பிரிவில் அக்குறணை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் 55 வயதுடைய பவுசுல் பரீலா என்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குறணை மேல்ச்சேனை பிரதேசத்தில் டிப்பர் வண்டி ஒன்று பின் நோக்கிச் செல்கின்ற சமயம் அதில் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ள பெண் கண்டி வைத்தியசாலையில் அனுமதித்த போதும்  நேற்று மாலை 6 மணி சிகிட்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அக்குறணை மேல்சேனை என்ற இடத்தைச் சேர்ந்த பவுசுல் பரீலா என்ற 55 வயதுடைய பெண் ஆவார்.

இவ் விபத்து தொடர்பாக டிப்பர் வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.