டில்லியில் கன்று குட்டிகளுடன் பாலியல் உறவு  வைத்த   18 வயது இளைஞர் ஒருவர்  எய்ம்ஸ் வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தென்மேற்கு டில்லியில் உள்ள நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் தனது காம உணர்வுக்காக கன்று குட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளார். 

அவர் நஜப்கார் பகுதியில் உள்ள பால் பண்ணையில் இருக்கும் கன்று குட்டிகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். 

இளைஞரின் இந்த செயல் குறித்து அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மகனை எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு அவனது பெற்றோர் அழைத்துச் சென்றனர். 

வைத்தியசாலையில் உள்ள மனோதத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மிருகங்களுடன் உறவு கொள்வது சட்டப்படி குற்றமாகும். 

மிருகங்களுடன் உறவு கொள்பவர்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களால் பெரும் பிரச்சினை ஏற்படும் என்கிறார்கள் வைத்தியர்கள். மிருகங்களுடன் உறவு கொண்டதற்காக எய்ம்ஸ் வைத்தியசாலையில் இந்த ஆண்டு சிகிச்சை பெறும் 2ஆவது நபர் இவர் ஆவார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் 7 மாத கன்று குட்டியுடன் உறவு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.