இலங்கைக்கு இயன்றளவு உதவிகளை வழங்குமாறு ஜோ பைடன் ஆலோசனை : மருந்துகள், அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள சர்வதேச வங்கிகளிடம் கோரிக்கை

Published By: Vishnu

27 Jun, 2022 | 07:27 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கரிசனையுடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் , இலங்கைக்கு இயன்றளவு உதவிகளை வழங்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க திறைசேரியின் ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபேர்ட் கப்ரொத் மற்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் கெலி கெய்டெலிங் ஆகியோருடன் , இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர்  27 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே இவ்விடயத்தினை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டினை வலுவனதாக முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்து வகையிலும் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அமெரிக்க இராஜதந்திரிகள் இதன் போது ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவின் விஜயத்திற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி , நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள், சமூக பிரச்சினைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மிகவும் கரிசனையுடன் இருப்பதாக இராஜதந்திரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தனர்.

இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கையுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கி , இயன்றவரை உச்சபட்ச உதவிகளை வழங்குமாறு தமக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுத்துவதானது , பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் செய்பாடுகளில் எதிர்காலத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இராஜதந்திரிகள் குழ நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் புரிதலுக்கும் , தமது புரிதலுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர்கள் இதன் போது தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக ரீதியிலான கருத்து வெளிப்பாட்டுக்கு இடையூறின்றி எவருக்கும் தமது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரமான இடம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக கொமர்ஷல் வங்கிக்கு 100 மில்லியன் டொலர்களை இடைக்கால நிதி உதவியாகவும் ,  5.75 மில்லியன் டொலர்களை மனிதாபிமான உதவியாகவும் அமெரிக்கா வழங்கியுள்ளது.

மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக கடன் சான்று பத்திரங்களை விடுவிக்கும் போது , இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சர்வதேச வங்கிகளின் உதவியை நாடவுள்ளதாக இதன் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06