இந்­திய இரா­ணு­வத்தை உளவு பார்த்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­த­தை­ய­டுத்து டெல்­லியில் உள்ள தூத­ர­கத்தில் இருந்து மேலும் 4 அதி­கா­ரி­களை பாகிஸ்தான் திரும்பப்பெறவுள்­ளது.

டெல்­லியில் உள்ள பாகிஸ்தான் தூத­ர­கத்தில் பணி­பு­ரிந்த மெக்மூத் அக்தர் என்ற ஊழியர் ஐ.எஸ்.ஐ. நிறு­வ­னத்­துக்கு உளவு பார்த்­த­தாக குற்றம் சாட்­டப்­பட்டார். அதைத் தொடர்ந்து அவர் இந்­தி­யாவில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டார்.

அவ­ரது வாக்­கு­மூலம் செய்தி ஊட­கங்­க­ளுக்கு சமீ­பத்தில் வெளி­யி­டப்­பட்­டது. அதைத் தொடர்ந்து டெல்­லியில் உள்ள பாகிஸ்தான் தூத­ர­கத்தில் இருந்து மேலும் 4 அதி­கா­ரிகள் திரும்ப பெறவுள்­ளனர்.

அதற்­கான தீவிர விசா­ர­ணையில் பாகிஸ் தான் வெளி­யு­றவுத் துறை அமைச்­சகம் உள்­ளது. தூத­ரக முதன்மை செய­லா­ளர்கள் காதீம்­ஹுசேன், முடாசிர் சீமா, ஷாகித் இக்பால் மற்றும் சயீத் பரூக் ஹபீப் ஆகி­யோரின் பெயர்கள் திரும்ப பெற உள்ள அதி­கா­ரிகள் பட்­டி­யலில் இடம்பெற்­றுள்­ளது. உளவு பார்த்­த­தாக இந்­தி­யாவில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட அக்தர் பாகிஸ்தான் தூத­ர­கத்தில் ‘விஸா’ பிரிவில் பணி புரிந்தார். டெல்­லியில் கைதுசெய்­யப்­பட்ட இவர் 3 மணி நேர விசா­ர­ணைக்கு பின் தூத­ரக சட்­டத்தின் கீழ் விலக்கு அளிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்டார்.

உளவு பார்க்க இவ­ருக்கு உதவி புரிந்த சுபாஷ் ஜாங்கீர், மௌ­லானா ரம்ஷான் ஆகியோர் டெல்லி மிரு­க­காட்­சி­சா­லையில் கைது செய்­யப்­பட்­டனர். 4-ஆவது நப­ரான ஷோகிப் ஜோத்பூரை சேர்ந்தவர். பாஸ்போர்ட் மற்றும் விசா ஏஜெண்டான இவர் ராஜஸ்தான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.