எரிபொருள் இன்றி முழு நாடும் ஸ்தம்பிதமடையும் விளிம்பில் உள்ளது - அநுரகுமார 

Published By: Digital Desk 4

26 Jun, 2022 | 10:49 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டுக்கு கடந்த வாரம் வரவிருந்ததாகக் கூறப்பட்ட எரிபொருள் கப்பல் தற்போது இந்தியாவிலுள்ளது.

முறையான விலை மனு கோரலின் அடிப்படையில் முன்பதிவு செய்யப்படாத இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமா இல்லையா என்பது சந்தேகத்திற்குரியது.

இதனால் முழு நாடும் ஸ்தம்பிக்கக் கூடிய விளிம்பில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபரை சந்திக்கிறார் அநுரகுமார திஸாநாயக்க | Virakesari.lk

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (25)  நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக வலு சக்தி அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்தார்.

எந்தவொரு கப்பலும் நாட்டை வந்தடையவில்லை. தற்போது அந்த கப்பல் இலங்கையின் எல்லையைத் தாண்டி கிருஸ்ணபட்டணம் பகுதிக்குச் சென்றுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்த கப்பல் தற்போது இந்தியாவிலுள்ளது. இது உரிய விலைமனு கோரலின் அடிப்படையில் வரவழைக்கப்பட்ட கப்பல் அல்ல.

அவசர இறக்குமதியாளர்கள் ஊடாக நடுக்கடலில் காணப்பட்ட கப்பலே இவ்வாறு வரவழைக்கப்பட்டது. குறித்த கப்பல் இலங்கைக்கு வருமா இல்லையா என்பது பெரும் சந்தேகத்திற்குரியதாகவுள்ளது.

எனவே முழு நாடும் ஸ்தம்பிதமடையக் கூடிய விளிம்பில் நாம் உள்ளோம். அமெரிக்காவிலுள்ள வங்கியொன்றின் பிணைமுறிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அவை ஜூலை 18 ஆம் திகதி காலாவதியாகவுள்ளன. இவ்வாறிருக்க அரசாங்கம் கடனை மீள செலுத்த முடியாது என அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்க ரிசேர்வ் வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ராஜபக்ஷ குடும்பம் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்துள்ளதாக குறித்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை சீசெல்ஸ் போன்ற வரி சலுகை வழங்கப்படும் நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் , குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது , 'ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நரகங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலை விட மோசமானது.' என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இன்று முழு நாடும், பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையற்ற நிலைமையை தோற்றுவித்துள்ளனர். விவசாயிகள், மீனவர்கள், அரச சேவைகள் என அனைத்தும் முடங்கியுள்ளன. இடைக்கிடை பாடசாலைகளை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது என்ன நாடு? இதனை நாம் மாற்ற வேண்டாமா?

ஆட்சியாளர்கள் இதற்கு பொறுப்புகூற வேண்டாமா? இது இயற்கையாக தோற்றம் பெற்ற அழிவு அல்ல. வெள்ளம் அல்லது சூறாவளியினால் உருவான அழிவல்ல இது. நாட்டை இந்த நிலைமைக்கு உள்ளாக்கியுள்ள ஆட்சியாளர்களை பதவி நீக்குவதற்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37