சம்பியன்ஸ் லீக் சுற்றுப்போட்டி - குருநாகல் பெலிக்கன்ஸ், கொம்பனித்தெரு ஜாவா லேன் கழகங்களுக்கு இலகு வெற்றி

Published By: Digital Desk 4

26 Jun, 2022 | 08:55 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் சுற்றுப்போட்டியின் 4ஆம் கட்டத்தின் இரண்டாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (26) குருநாகல் பெலிக்கன்ஸ், கொம்பனித்தெரு ஜாவா லேன் ஆகிய கழகங்கள் கோல் மழை பொழிந்து இலகுவாக வெற்றியீட்டின.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இ.போ.ச. கழகத்துக்கு எதிரான போட்டியின் ஆரம்பத்தில் அற்புதமாக விளையாடிய பெலக்கன்ஸ் கழகம் முதல் 13 நிமிடங்களில் 3 கோல்களைப் போட்டதன் பலனாக இறுதியில் 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.

போட்டியின் 4ஆவது நிமிடத்தில் பெலிக்கன்ஸ் அணித் தலைவர் கசுன் ப்ரதீப் உதைத்த பந்தை இ.போ.ச. கோல்காப்பாளர் சுதேஷ் சுரங்க தடுத்தபோது முன்னோக்கி வந்த பந்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயகுமார் சாந்தன் கோலாக்கினார்.

இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் கோல்காப்பாளரால் திசை திருப்பப்பட்ட பந்தை நோக்கி வேகமாக நகர்ந்த நப்ஷான் மொஹமத் சற்று கடினமான கோணத்திலிருந்து கோல் போட்டு பெலிக்கன்ஸ் கழகத்தை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.

போட்டியின் 13ஆவது நிமிடத்தில் இ.போ.ச. கோல் எல்லையில பந்தை சாமர்த்தியமாக கட்டுப்டுத்திய நப்ஷான் மொஹமத் தனது 2ஆவது கோலைப் போட்டார்.

அதன் பின்னர் மேலும் 2 கோல் போடும் வாய்ப்புகளை பெலிக்ன்ஸ் முன்கள வீரர்கள் தவறவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைந்தது.

இடைவேளையின் பின்னரும் ஆட்டம் மந்த கதியில் நடைபெற்றது.

எவ்வாறாயினும் போட்டி முடிவடைய 4 நிமிடங்கள் இருந்தபோது வலது கோடியிலிருந்து மாற்று வீரர் நந்தசிறி ஏக்கநாயக்க பரிமாறிய பந்தை மற்றொரு மாற்று வீரர் ரன்மல் ரத்தவத்த கோலாக்கினார். ரத்வத்த உதைத்த பந்து வலது கோல்கம்பத்தில் பட்டு கோலினுள் புகுந்தது.

ஜாவா லேன் கோல் மழை

குருநாகல் மாளிகாபிட்டி விளையாட்ரங்கில் நடைபெற்ற மற்றொரு சம்பியன்ஸ் லீக் போட்டியில் கோல்மழை பொழிந்த ஜாவா லேன் 7 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அநுராதபுரம் சொலிட் கழகத்தை பந்தாடியது.

இந்த வருட சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் அதிக கோல்கள் கோல்களைப் போட்டு சாதனை நிலைநாட்டிய ஜாவா லேன் கழகம் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியின் 14ஆவது நிமிடத்தில் சமித் மதுரங்க போட்ட கோலின்மூலம் சொலிட் முன்னிலை அடைந்தது.

ஆனால், அதன் பின்னர் ஆட்டத்தின் பிடியை தனதாக்கிக்கொண்ட ஜாவா லேன் 32ஆவது நிமிடத்திலிருந்து கோல் மழை பொழியத் தொடங்கியது.

போட்டியின் 32ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் சார்பாக நவீன் ஜூட் கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஜாவா லேன் சார்பாக ஹெட்-டரிப் உட்பட 5 கோல்களை ஒலுவாசியுன் ஒலாவேல் போட்டு ஜாவா லேனின் வெற்றியை இலகுவாக்கினார்.

போட்டியின் 39ஆவது நிமிடத்தில் ஜாவா லேனின் 2ஆவது கோலை ஒலாவேல் போட, இடைவேளையின்போது ஜாவா லேன் 2 - 1 என முன்னிலை அடைந்தது.

இடைவேளையின் பின்னர் முழுமையான ஆதிக்கம் செலுத்திய ஜாவா லேன் 58, 59, 70, 78ஆவது நிமிடங்களில் ஒலாவேல் மூலம் ஒரு பெனல்டி உட்பட 4 கோல்களை போட்டது.

போட்டியின் 71ஆவது நிமிடத்தில் சொலிட் வீரர் சகாயரினோசன் லெம்பர்ட் நேரடி சிவப்பு அட்டடைக்கு இலக்கானார்.

ஆட்டம் முழு நேரத்தை கடந்து உபாதைஈடு நேரத்துக்குள் புகுந்த 2ஆவது நிமிடத்தில் நவீன் ஜூட் தனது 2ஆவது கோலைப் போட்டு ஜாவா லேனுக்கு 7 - 1 என்ற வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

சுப்பர் சன் இறுக்கமான வெற்றி

மாத்தறை கொட்டவில மைதானத்தில் நடைபெற்ற பொலிஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் கடைசிக் கட்டத்தில் போட்ட கோலின் உதவியுடன் 1 - 0 என்ற கோல் கணக்கில் சுப்பர் சன் கழகம் இறுக்கமான வெற்றியைப் பெற்றது.

சுப்பர் சன் சார்பாக போசு க்வாபேனா 80ஆவது நிமிடத்தில் கோல் போட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41