மத்திய கிழக்கில் நன்மதிப்பை இழந்துள்ள இலங்கை

Published By: Digital Desk 5

26 Jun, 2022 | 06:46 PM
image

லத்தீப் பாரூக்

இலங்கையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் மத்தியில்  நன்மதிப்பை இழந்துள்ளதாக அறிய முடிகின்றது.

பல நூற்றாண்டுகளாக மத்திய கிழக்கோடு இலங்கைக்கு இருந்து வந்த நல்லுறவு அண்மைய தசாப்தங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டில் நடைமுறை படுத்திய இனவாத அரசியல், இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான விரோதப்போக்குகள், குறுகிய கொள்கைகள் என்பனவே இந்த நிலைக்கு பிரதான காரணங்களாகும்.

இலங்கைக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கும் இடையிலான உறவுகள் சுமார் 13நூற்றாண்டுகளுக்கும் அதிக பழமையானவை. மேற்கையும் கிழக்கையும் இணைத்த அரபு வர்த்தகர்கள் தமது வர்த்தக பயணங்களை இலங்கையிலும் மேற்கொண்டுள்ளனர்.

பலஸ்தீன மக்களின் நியாயாமான போராட்டத்துக்கு இலங்கை சகல பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளிலும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வந்தது. இதனால் அரபிகளின் உள்ளத்திலும் இலங்கை இடம் பிடித்தது. இலங்கையையும் மத்திய கிழக்கையும் மிக நெருக்கமானதோர் புள்ளிக்கு கொண்டு வந்த விடயமும் இதுவேயாகும்.

இலங்கையின் அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இந்திய பிரதமர் இந்திரா காந்தி, எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாஸர், யூகோஸ்லாவியா ஜனாதிபதி மார்ஷல் டிட்டோ ஆகிய நால்வரும் மூன்றாம் மண்டல நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் அணிசேரா அமைப்பின் முக்கிய நான்கு தூண்களாகக் கருதப்பட்ட காலம் அது.

1976ஆகஸ்ட் 16 முதல் 19 வரை கொழும்பில் இடம்பெற்ற அணிசேரா உச்சி மாநாட்டில் அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹ{ஸைனைத் தவிர மற்ற எல்லா அரபு தலைவர்களும் பங்கேற்றமை இலங்கையுடனான அரபுலகின் நற்பை உலகுக்கு பறைசாற்றி நின்றது. 

1960 மற்றும் 1970களில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எண்ணெய் வளங்கள் அபிவிருத்தி காணத் தொடங்கிய வேளையில் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதன்மூலம் அன்றைய காலகட்டத்தில் வருடாந்தம் சுமார் 7 பில்லியன் அnமிக்க டொலர்கள் நாட்டுக்கு வருமானமாகக் கிடைத்தது. இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாகக் கருதப்பட்டது. ஆனாலும் அன்றைய அரசியல் தலைவர்கள் எவரும் இந்தப் பிராந்தியங்களுக்கு விஜயம் செய்து இந்த நாடுகளுடனான உறவுகளுக்கு மேலும் வலுவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கவே இல்லை. 

உதாரணமாக, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் தற்போது போல் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைக்கு நாடு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது ஜனாதிபதி பிரோமதாஸ அன்று ஈராக்கின் தூதுவராக இலங்கையில் பணியாற்றிய அப்தோ அலி தாயிரியை அலரி மாளிகைக்கு வரழைத்து நாடு எதிர்நோக்கி உள்ள எரிபொருள் தட்டுப்பாடு பற்றி பேசினார். 

அப்போது இரவு 8.30 மணி இருக்கும். ஈராக்கில் அது இரவுவேளை என்பதால் அடுத்த நாள் காலையில் தான் ஈராக்கின் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவரோடு இதுபற்றி பேசிவிட்டு அறிவிப்பதாக ஈராக் தூதுவர் கூறினார். ஆனால் தூதுவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஈராக்கின் தேசிய எண்ணெய் நிறுவனத் தலைவரின் வதிவிட தொலைபேசி இலக்கத்தை ஜனாதிபதி பிரேமதாஸ தன்வசம் தயாராக வைத்திருந்தார்.

அந்த இலக்கத்துக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டு தூதுவர் அவரோடு பேச வைக்கப்பட்டார். உடனே சாதகமான பதில் கிடைத்தது. இலங்கையர்கள் எமது சகோதரர்கள். அவர்களுக்கு நிச்சயம் நாம் உதவுவோம் என்று மறுமுனையிவ் பதில் அளித்த ஈராக்கின் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் அடுத்த நாள் காலையில் பஷ்ரா நகர துறைமுகம் நோக்கி செல்வதற்கு தயார் நிலையில் இருந்த இரண்டு எண்ணெய்க் கப்பல்களை உடனடியாக தான் இலங்கை நோக்கி திசை திருப்பவதாக கூறினார். 

இலங்கை மீது அரபு மக்கள் கொண்டிருந்த அன்பு, அபிமானம், கௌரவம் என்பன அன்று இவ்வாறு தான் இருந்தன. 2009இன் பின்னர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமானப்படுத்தும் வகையிலான பிரசாரங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் ஒழுங்கமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டன. இது அரபுலக அரசுகளையும் அந்த நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதே கலப்பகுதியில் தான் அரசாங்கம் இஸ்ரேலிய சக்திகளுக்கும் இந்த நாட்டின் கதவுகளைத் திறந்து விட்டது. சுமார் அரை நூற்றாண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிரான தமது தீய எண்ணங்களை நிறைவேற்ற இந்த நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக அவர்கள் காத்திருந்தனர். 

இதேகாலப்பகுதியில் தான் இந்தியாவின் ஆளும் கட்சியான பி.ஜே.பி.யின் முக்கிய அங்கமான ஆர்எஸ்எஸ் தனது ஆதிக்கத்தை இங்கே நிலை நிறுத்தவும் வழிகள் திறந்து விடப்பட்டன. இந்த இரு சக்திகளினதும் வருகையோடு தான் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரம் அடைந்தன.

தொடர்ந்து பலஸ்தீன் விடயத்திலும் இலங்கையின் நிலைப்பாடுகள் மாற்றமடைந்தன. சுனாமி பேரழிவின் போது முஸ்லிம்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட பணம் கூட பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிய தேவைக்காக முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. 

சுனாமியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக சவூதி அரேபியா 500வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. முஸ்லிம்களுக்கு மட்டும் இந்த வீடுகள் வழங்கப்படுவதை இனவாத சக்திகள் எதிர்த்தன. மதகுருமாரை தூண்டிவிட்டு நீதிமன்றம் சென்று இந்த வீடுகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதற்கு எதிராகத் தடை உத்தரவு பெற்றனர்.

இந்த வீடுகள் பராமரிப்பற்ற நிலையில் முற்றிலும் சிதைவடைந்த கட்டடங்களாகக் காணப்படுகின்றன. அவை புதர்க்காடுகளாக மாறிவிட்டன. இந்த வீடுகள் முற்றாக கைவிடப்பட்டதன் காரணமாக திருத்தப்பட முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்டன. 

இவ்வாறான பின்னணியில் தான் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்,  வன்முறைகள் ஆகியற்றுடன் தொடர்புடைய நபர்கள் மீது அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பௌத்த கற்கை நிலையத்தின் தலைவரான சங்கைக்குரிய கல்கந்தே தம்மானந்த தேரர் ஆங்கில ஊடுகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான சதித் திட்டங்கள் தொடர்பான எல்லாத் தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அவை இன நல்லிணக்கத்துக்கு எவ்வாறு பாதகமாக அமைந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ள அவர் இவை முற்றிலும் அரசியல் நோக்கம் கருதி செய்யப்பட்டவை என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, கொரோனா காலப்பகுதியில் இலங்கையில் பிறந்து 20நாட்களேயான பச்சிளம் குழந்தையொன்று எரிக்கப்பட்டமை முழு உலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நைஜீரியாவில் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது பிரதான பேசுபெருளாக குறித்த விடயம் அமைந்திருந்தது. 

இலங்கையில் நடந்தேநிய முஸ்லிம்களுக்கும் எதிரான திட்டமிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முஸ்லிம் நாடுகளுக்கு உரிய விதத்தில் நன்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமைகளை அறிந்தோ அறியாமலோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை அழைத்து உதவி கேட்;கின்றார். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்சி பெறவே அவர் தற்போது அரபுலகின் ஆதரவை நாடியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04