புதுமுக நடிகரை இயக்கும் கே எஸ் ரவிக்குமார்

Published By: Vishnu

26 Jun, 2022 | 12:26 PM
image

இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு புதுமுக நடிகர் எல்வின் லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடன இயக்குநர், நடிகர், இயக்குவர் என பன்முக திறமையுடன் பலம் வரும் ராகவா லோரன்ஸின் இளைய சகோதரரான எல்வின் லோரன்ஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 'காஞ்சனா' படத்தில் இடம்பெற்ற 'சில்லாட்டா.. 'எனத் தொடங்கும் பாடலில் ராகவா லோரன்சுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார்.

இவர் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை மூத்த இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். இதற்கான தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது. படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் ராகவா லோரன்ஸின் சகோதரர் எல்வின் கதையின் நாயகனாக அறிமுகமாவார் என அறிவிப்பு வெளியானது என்பதும், இவர் தற்போது மராத்தி மொழியில் வெளியான திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதும், புதுமுகமாக இருந்தாலும் ராகவா லோரன்ஸின் சகோதரர் என்பதால் இவரின் திரைப்படத்திற்கு தமிழ் திரையுலக வணிகர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03