கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

25 Jun, 2022 | 08:40 PM
image

ஆர்.ராம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரண்டு தெரிவுகளே உள்ளனவென்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து மேலும் தெரிவித்தஅவர்,

ஜனாதிபதி கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்புவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் ஊடாக அல்லது மக்கள் போராட்டங்களின் ஊடாக மட்டுமே முடியும்.

இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக சகல அதிகாரங்களுடனும் இருந்த மார்க்கோஸ், அப்பதவியில் இருந்து மக்களின் கிளச்சியினால் வெளியேற்றப்பட்டார்.

 அவ்விதமாக தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் ஊடாக பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

அவ்வாறில்லையேல், பாராளுமன்றத்தின் ஊடாக அவருடைய அதிகாரங்களை முழுமையாக குறைப்பதன் ஊடாக ஆட்சி, அதிகார கட்டமைப்பிலிருந்து ஒதுக்கிக் கொள்ள முடியும்.

தற்போதைய நிலையில் மேற்படி இரண்டு முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தாக்கங்கள் தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மறுபக்கத்தில் உத்தேச 21ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அந்த திருத்தச்சட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

துரதிஷ்டமாக, உத்தேச 21ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடையே இணக்கமான நிலைப்பாடொன்று எட்டுவதில் பெரும் இடைவெளிகள் காணப்படுகின்றன.

குறிப்பாக, எதிர்க்கட்சிகள் அத்திருத்தச்சட்டத்தினை முழுமையாக எதிர்க்கும் மனோநிலையில் உள்ளன. ஆகவே பாராளுமன்ற முறையிலும் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைக்க முடியுமான என்பதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40