உண்மையான நட்பு நாட்டை அரசாங்கம் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் - ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர்

Published By: Digital Desk 3

24 Jun, 2022 | 10:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள வேளையில் மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் ரஷ்யாவின் உதவியை பெற்றுக்கொள்ள அவதானம் செலுத்தவில்லை.

உண்மையான நட்பு நாட்டை அரசாங்கம் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்தார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ரஸ்யா-இலங்கை நல்லுறவு தொடர்பிலான நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு சாதகமான பல முதலீடுகளை அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இலங்கை அரசாங்கம் அவ்விடயம் குறித்து அவதானம் செலுத்தவில்லை. தூதுவராக கடமையாற்றிய போது 18 இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

முதலீடுகள் ஊடாக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வழங்கினார். ஆனால் இலங்கை அதனை பயன்படுத்தவில்லை.

இந்த 800 மில்லியன் டொலர் சுமார் இரண்டு வருடகாலமாக ரஷ்யாவின் வெளிவிவகார நடவடிக்கை திணைக்களத்தின் கையிருப்பில் கைப்பட்டு பின்னர் மாற்று நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.

ரஷ்ய கூட்டாட்சி அரசாங்கத்திடமிருந்து பல ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தும் அதனை இலங்கை முறையாக பயன்படுத்திக்கொள்ளமலிருப்பது கவலைக்குரியது. தற்துணிவுடன் செயற்படாமல் இருக்கும் அளவிற்கு இலங்கையின் வெளிவிவகார கொள்கை காணப்படுகிறது.

ஒரு நாடு தனக்கு ஏற்ற வகையில் வெளிவிவகார கொள்கையினை வகுக்கும் போது இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை தெரிவு செய்யப்பட்ட ஒருசில நாடுகள் வகுக்கின்றன. இதன் காரணமாக உண்மையான நட்பு நாடுகளை இணங்கான முடியாத நிலைமை காணப்படுகிறது

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள வேளையில் மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் ரஷ்யாவின் உதவியை பெற்றுக்கொள்ள அவதானம் செலுத்தவில்லை.ரஸ்யாவின் உதவியை பெற்றுக்கொண்டால் பிற நாடுகளின்  உறவில் பாதிப்பு ஏற்படும் என அரசாங்கம் தொடர்ந்து பின்வாங்குகிறது.

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினை பாரிய சமூக நெருக்கடியாக தோற்றம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கிள் பல நாட்களாக வரிசையில் காத்திருக்கும் மக்கள் பொறுமையிழந்து ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்ளும் வாய்ப்பு அதிகளவில் காணப்படுகின்றன. ஆகவே அரசாங்கம் நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59